ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் திரைப்படம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

Published : Feb 05, 2021, 04:22 PM IST

ஜனவரி மாதம் முதல் தியேட்டர்களில் படங்களை வெளியிட கேரள அரசு அனுமதியளித்தும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின்  'த்ரிஷ்யம் 2' திரைப்படம் ஓடிடியில் வெளிப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். 

PREV
15
ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் திரைப்படம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

2013ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இந்த படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல் ஹாசன், தெலுங்கில் வெங்கடேஷ், இந்தியில் அஜய் தேவ்கன் என டாப் ஸ்டார்கள் நடித்தனர். 
 
25

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 'த்ரிஷ்யம் 2' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்த அதே கூட்டணி தான் இப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர். ஒரே கட்டமாக 46 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிக்கப்பட்டது. 

35

மோகன்லால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த நிலையில் 'த்ரிஷ்யம் 2' டீசர் புத்தாண்டுக் கொண்டாட்டமாக ஜனவரி 1 ஆம் தேதி அமேசான் ஓடிடி யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், விரைவில் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

45

இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி அமேசான் ஓடிடியில் 'த்ரிஷ்யம் 2' ட்ரைலர் வெளியிடப்படும் என மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இப்படம் அமேசான் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. 
 
55

ஜனவரி மாதம் முதல் தியேட்டர்களில் படங்களை வெளியிட கேரள அரசு அனுமதியளித்தும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின்  'த்ரிஷ்யம் 2' திரைப்படம் ஓடிடியில் வெளிப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். 

ஜனவரி மாதம் முதல் தியேட்டர்களில் படங்களை வெளியிட கேரள அரசு அனுமதியளித்தும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின்  'த்ரிஷ்யம் 2' திரைப்படம் ஓடிடியில் வெளிப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். 

click me!

Recommended Stories