மாளவிகா மோகனன் எண்ட்ரி
மலையாள நடிகைகள் தமிழ் திரையுலகில் வந்து சாதிப்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. அந்த லிஸ்டில் புதுவரவாக இணைந்திருப்பவர் மாளவிகா மோகனன். கோலிவுட்டில் இவரது சினிமா பயணம் தொடங்கியதே ரஜினியின் பேட்ட படம் மூலம் தான். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா.
ஜாக்பாட்டாக அமைந்த மாஸ்டர் படம்
இதையடுத்து இவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் இதுதான். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் மாளவிகாவுக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மாறனில் தனுஷுக்கு ஜோடி
அந்த வகையில் தற்போது மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார் மாளவிகா. கார்த்திக் நரேன் இயக்கி உள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மாளவிகா. படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள இப்பட,ம் வருகிற மார்ச் 11-ந் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சூடுபிடிக்கும் மாறன் புரமோஷன்
மாறன் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நடிகை மாளவிகா மோகனன், படத்தை பற்றியும், படத்தில் தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் பேசி உள்ளார்.