டயலாக் பேசச் சொன்னா ஏபிசிடி சொல்வாங்க... தமிழ் நடிகைகள் மீது மாளவிகா மோகனன் ஓபன் அட்டாக்

Published : Jan 23, 2026, 11:43 AM IST

தமிழ், தெலுங்கு திரையுலகில் சில நடிகைகள் டயலாக்குகளை மனப்பாடம் செய்து பேசாமல், டப்பிங்கில் அதை சரி செய்து கொள்வதாக நடிகை மாளவிகா மோகனன் பேசி இருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.

PREV
14
Malavika Mohanan controversial interview

தமிழ் மற்றும் தெலுங்கில் சில நடிகைகள் வசனங்களை மனப்பாடம் செய்வதில்லை என மாளவிகா மோகனன் கூறியுள்ளார். சோகமான காட்சியில் நடிக்கும்போது, முகத்தில் சோக பாவனையை காட்டி, வசனத்திற்கு பதிலாக 1,2,3,4,5 என எண்ணுவதாகவும், பின்னர் டப்பிங்கில் மேட்ச் பண்ணுவதாகவும் மாளவிகா குறிப்பிட்டார்.

24
விமர்சித்த மாளவிகா மோகனன்

இதுகுறித்து அவர் பேசியதாவது : "பல காலமாக தமிழ், தெலுங்கில் சில நடிகைகள் வசனங்களைக் கூட கற்பதில்லை என்பது எனக்குத் தெரியும். சோகமான காட்சியில், முகத்தில் சோகமான பாவனையைக் காட்டி, வசனத்திற்குப் பதிலாக 1,2,3,4,5 என்று சொல்வார்கள். காதலனிடம் கோபப்படும் காட்சியாக இருந்தால், முகத்தில் கோபத்தைக் காட்டிவிட்டு ஏ, பி, சி, டி என்று சொல்வார்கள். பின்னர் டப்பிங்கில் லிப்-சிங்க் செய்துவிடுவார்கள்.

34
யார் அந்த நடிகை?

இது ஒன்றும் புதிய விஷயமல்ல. பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. தங்கள் கெரியர் முழுவதும் இப்படிச் செய்தவர்கள் இருக்கிறார்கள்." கலாட்டா ப்ளஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் மாளவிகா இவ்வாறு பதிலளித்தார். மாளவிகாவின் இந்த கருத்துக்குப் பிறகு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாளவிகா குறிப்பிட்ட நடிகைகள் யார் என்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

44
மாளவிகாவின் மூவி லைன் அப்

இதற்கிடையில், மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் 'தி ராஜா சாப்' தான் மாளவிகாவின் புதிய படம். ஹாரர் ஃபேண்டஸி ஜானரில் வெளியான இப்படம் குறுகிய நாட்களில் 200 கோடி கிளப்பில் இணைந்தது. தற்போது அவர் நடிப்பில் சர்தார் 2 என்கிற தமிழ் படம் தயாராகி வருகிறது. அப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. அதில் கார்த்தியுடன் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories