Making of Mustafa Mustafa song AR Rahman: காதல் தேசம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை எஆர் ரகுமான் தயங்கி தயங்கி பாடவே அந்த பாடல் 30 ஆண்டுகளாக நட்பின் அடையாளமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இசைப்புயல் ஏஆர் ரகுமான் செய்யாத மேஜிக்கே கிடையாது. தனது ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு மேஜிக்கை அவர் செய்திருக்கிறார். அப்படி எந்த பாடலில் என்ன மேஜிக் செய்தார் என்று பார்க்கலாமா? கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை நண்பர்களால் கொண்டாடப்படும் ஒரு பாட்டு என்றால் அது முஸ்தபா முஸ்தபா என்ற பாடல் தான்.
Director Kathir and AR Rahman Kadhalar Desam combo
கடந்த 1996ஆம் ஆண்டு இந்தப் பாடல் கம்போஸ் செய்யப்பட்டது. அப்பாஸ், வினீத், தபு, வடிவேலு ஆகியோர் பலர் நடித்த காதல் தேசம் படமானது 1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வந்தது. ஒரு பெண்ணை நண்பர்கள் இருவர் காதலிக்கும் ஒரு கதை.
இந்தப் படத்தில் இடம் பெற்ற முஸ்தபா முஸ்தபா என்ற பாடலை வேறொரு பின்னணி பாடகரை வைத்துப் பாட வைக்கத்தான் ஏஆர் ரகுமான் திட்டமிட்டிருந்தார். ஆனால், மெட்டு அமைக்கும்போது ரகுமான் அவராகவே சும்மா 'ரஃப் டிராக்' ஒன்று கொடுத்திருக்கிறார். அது படத்தின் இயக்குனர் கதிருக்கு பிடித்துவிட்டது.
44
ஏஆர் ரகுமான் தயங்கி தயங்கி பாடிய பாடல்
அதன் பின்னர் அந்த குரலில் முஸ்தபா முஸ்தபா பாடலை கேட்ட இயக்குநர் அவரையே பாட வைத்திருக்கிறார். ஆனால், ரகுமான் வேறொரு பின்னணி பாடகரை வைத்து பாட வைக்கலாம் என்ற பிளானில் இருந்த நிலையில் இயக்குநர் சொன்னதற்காக தயக்கத்துடன் முஸ்தபா பாடலை பாடியிருக்கிறார். அந்தப் பாடல் தான் இன்று வரை நட்பின் கீதமாக அனைவரது இதயங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.