முடிவுக்கு வருகிறதா அன்புவின் அம்மாவின் அதிகாரம்? ஆனந்திக்கு கிடைத்த புதிய பொறுப்பு - சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட் அப்டேட்

Published : Mar 25, 2026, 01:44 PM IST

சிங்கப் பெண்ணே சீரியலில் இத்தனை நாட்களாக வீட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த அன்புவின் அம்மாவின் பிடி தளர்வதை இன்றைய காட்சிகள் உணர்த்துகின்றன.

PREV
14
Singappenne Serial Today Episode Promo

சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' தொடர் தற்போது அதிகாரப் பகிர்வு மற்றும் குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக கொண்டு நகர்ந்து வருகிறது. இன்றைய புதிய ப்ரோமோவின் தொடக்கத்தில், அன்புவின் தாய், மிகுந்த கோபத்துடனும் ஆதங்கத்துடனும் பேசுகிறார்.

24
Singappenne Serial Episode

அவர், "என்கிட்ட இருந்து பொறுப்பை புடுங்கி அவகிட்ட கொடுத்து, நான் அஞ்சுக்கும், பத்துக்கும் அவகிட்ட கெஞ்சிட்டு இருக்கணும்... அதுதான உங்க திட்டம்?" என்று அவர் ஆவேசமாகக் கேட்கிறார். குடும்பத்தில் தனக்கு இருந்த முக்கியத்துவம் குறைக்கப்படுவதையும், மற்றொரு பெண்ணிடம் அதிகாரம் செல்வதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

34
Anbu Mother and Anandhi

இதனைத் தொடர்ந்து, கதையில் ஒரு புதிய திருப்பமாக ஆனந்தியைச் சந்திக்க சென்னைக்குச் செல்லும் திட்டம் முன்வைக்கிறார்கள் கோகிலாவின் மாமியார், மாமனார். அவர்கள், "பெத்தவங்க சில விஷயங்களைச் சொல்ல மாட்டாங்கல்ல... அதான் நானும் அத்தையும் ஆனந்தியைப் பார்க்க சென்னைக்கு வரலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்" என்றார். இந்தச் சென்னை பயணம் கதையில் அடுத்தகட்ட நகர்வுக்கு மிக முக்கியமாக அமையப்போகிறது.

44
Sun TV Serial Today Episode

ப்ரோமோவின் இறுதியில், குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுகிறது. ஆனந்தி, "இந்த பணத்தை வாங்கிக்கோங்க.” என சொல்ல அதற்கு அவரின் மாமியார், ”அவன் தான் கஜானாவ உன்கிட்ட ஒப்படைச்சிட்டு போயிட்டான்ல, நீயே பார்த்துக்கோ நிர்வாகத்தை" என்று கூறி, பணத்தை வாங்காமல் சென்றுவிட்டார்.

ஆனந்தி எப்படி இந்தச் சவால்களைச் சமாளித்து குடும்ப நிர்வாகத்தை வழிநடத்தப் போகிறாள்? சென்னை பயணத்தில் என்னென்ன உண்மைகள் வெளிவரும்? போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுடன் இன்று இரவு 9:30 மணிக்கு இந்த எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories