ஸ்பைடரை தொடர்ந்து தமிழில் வெளியாகும் மகேஷ் பாபு படம்..இந்த முறையாவது வேலைக்காகுமா?

Kanmani P   | Asianet News
Published : Apr 28, 2022, 03:13 PM ISTUpdated : Apr 28, 2022, 03:16 PM IST

முன்னதாக மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தை தொடர்ந்து தற்போது உருவாகியுள்ள சார்காரு வாரி பாட்டா படம் தமிழில் வெளியாகவுள்ளது.

PREV
19
ஸ்பைடரை தொடர்ந்து தமிழில் வெளியாகும் மகேஷ் பாபு படம்..இந்த முறையாவது வேலைக்காகுமா?
Sarkaru Vaari Paata

தெலுங்கு சூப்பர் ஹீரோக்களை ராம் சரண், என்டிஆர், யாஷ் போன்றவர்களின் படங்களுக்கு தமிழகத்தில் நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது. இந்த வரிசையில் இடம் பெற மகேஷ் பாபு தற்போது முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இவர் நடிப்பில் ஸ்பைடர் படம் இங்கு வெளியாகி இருந்தது.

29
spyder

கடந்த 2017ம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் என்வி பிரசாந்த் தயாரிப்பில் வெளியான ஸ்பைடர் திரைப்படம் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் வெளியானது.

39
spyder

இந்த படத்தில் மகேஷ்பாபு ரகுல் ப்ரீத் சிங் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது.

49
spyder

 தமிழில் டப் செய்யப்பட்டு இந்த படம் உலகமெங்கும் கிட்டத்தட்ட 800 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு பெறவில்லை அதோடு வசூல் ரீதியிலும் தான்

59
Sarkaru Vaari Paata

இந்நிலையில் ஸ்பைடர் மேன் படத்தை தொடர்ந்து தற்போது மகேஷ் பாபு நாடிப்பில் உருவாகியுள்ள சார்காரு வாரி பாட்டா படம் தமிழில் வெளியாகவுள்ளது.

69
Sarkaru Vaari Paata

சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் பரசுராம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர் , சமுத்திரக்கனி , வெண்ணெல கிஷோர் மற்றும்ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

79
Sarkaru Vaari Paata

தெலுங்கு மொழி அதிரடி நகைச்சுவைத் திரைப்படமான இது மைத்ரி மூவி மேக்கர்ஸ் , 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் ஜி. மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் மூலம்  தயாரிக்கப்பட்டுள்ளது. 

89
Sarkaru Vaari Paata

இந்த படத்திலிருந்து சமீபத்தில் வெளியான 'கலாவதி' பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்து.     அனந்த ஸ்ரீராம்வரிகளில் உருவான இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்த பாடல் மூலம் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறிவுள்ளது.

99
Sarkaru Vaari Paata

வரும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த முறையாவது தமிழ் ரசிகர்கள் மகேஷ் பாபுவுக்கு கைகொடுப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம். 

Read more Photos on
click me!

Recommended Stories