மாதம்பட்டி ரங்கராஜுக்கும், தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் ஜாய் கிரிசில்டா. இவர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் உள்ள கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இதையடுத்து ஜாய் கிரிசில்டாவும், மாதம்பட்டி ரங்கராஜும் சென்னையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 4 முறை கர்ப்பமாகி இருக்கிறார் ஜாய் கிரிசில்டா. அதில் 3 முறை அபார்ஷன் செய்துவிட்டாராம்.
24
கர்ப்பமான ஜாய் கிரிசில்டா
இதையடுத்து 4-வது முறையாக ஜாய் கிரிசில்டா கர்ப்பமான பின்னர், அவரை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இதையடுத்து தன்னுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜாய், தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் போட்டுடைத்தார். அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியதாக கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார் ஜாய் கிரிசில்டா. ஆனால் இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
34
மகளிர் ஆணையத்தில் விசாரணை
இதையடுத்து மகளிர் ஆணையத்திற்கு சென்று புகார் அளித்திருந்தார் ஜாய். இந்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அக்டோபர் 2வது வாரத்தில் மகளிர் ஆணையத்தில் ஆஜர் ஆனார் மாதம்பட்டி ரங்கராஜ், அதுவும் தன்னுடைய முதல் மனைவி ஸ்ருதி உடன் ஆஜராகினார். இதன் பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் மாதம் 6.50 லட்சம் கொடுக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஜாய் கிரிசில்டா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மாதம்பட்டி ரங்கராஜ் ஆசைப்பட்டது நடக்காமல் போய் இருக்கிறது. ஜாய் கிரிசில்டாவுடன் வாழும் போது நமக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என கூறி அதற்கு ரஹா ரங்கராஜ் என்று பெயரையும் வைத்திருக்கிறார் மாதம்பட்டி, ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.