மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி எனக்கூறி பரபரப்பை கிளப்பியவர் ஜாய் கிரிசில்டா. இவர் சினிமாவில் ஸ்டைலிஷ்டாக பணியாற்றி இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜின் பர்சனல் ஸ்டைலிஷ்டும் ஜாய் கிரிசில்டா தான்.
210
விஜய்யுடன் ஜாய் கிரிசில்டா
ஜாய் கிரிசில்டா தளபதி விஜய் உடனும் பணியாற்றி இருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ஜில்லா திரைப்படத்தில் விஜய்யின் ஸ்டைலிஷ்டாக ஜாய் கிரிசில்டா பணியாற்றி உள்ளார்.
310
சிவகார்த்திகேயனின் ஸ்டைலிஷ்ட்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கும் ஸ்டைலிஷ்டாக பணியாற்றி இருக்கிறார் ஜாய் கிரிசில்டா. அவரை தன்னுடைய நண்பன் என குறிப்பிட்டு ஏராளமான பதிவுகளையும் போட்டுள்ளார்.
ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவரின் முதல் கணவர் பெயர் பிரெட்ரிக். இவர் தமிழில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
510
விவாகரத்து
ஜாய் கிரிசில்டா - பிரெட்ரிக் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இவர்களின் திருமண வாழ்க்கை ஐந்து ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
610
மாதம்பட்டி ரங்கராஜ் உடன் பழக்கம்
பிரெட்ரிக்கை விவாகரத்து செய்த பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் ஜாய் கிரிசில்டாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரின் பர்சனம் ஸ்டைலிஷ்டாக பணியாற்றி வந்த ஜாய், நாளடைவில் அவர் மீது காதல் கொண்டார்.
710
2வது திருமணம்
மாதம்பட்டி ரங்கராஜை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கடந்த ஜூலை மாதம் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஜாய் கிரிசில்டா. இருவரும் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் மிகவும் வைரல் ஆனது.
810
கர்ப்பம்
மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்டதாக போட்டோ வெளியிட்ட கையோடு, தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஜாய் கிரிசில்டா.
910
புகார்
தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்த ஜாய் கிரிசில்டா, தற்போது அவர் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகாரும் அளித்துள்ளார் ஜாய்.
1010
சினிமா ஹீரோயின் போல் ஜொலிக்கும் ஜாய்
அழகில் சினிமா ஹீரோயின் போல் ஜொலிக்கும் ஜாய் கிரில்டா, விதவிதமாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களின் தொகுப்பு தான் இது.