2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 10 சிறு பட்ஜெட் படங்கள் - முழு லிஸ்ட் இதோ

Published : Dec 29, 2025, 11:53 AM IST

2025-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டாப் 10 சிறு பட்ஜெட் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
110
1. டூரிஸ்ட் ஃபேமிலி

அறிமுக இளம் இயக்குநர் அபிஷான் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான படம். விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 10 கோடி முதலீட்டில் உருவாகி 90 கோடிகள் வசூல் சம்பவம் செய்தது.

210
2. சிறை

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரி இயக்கத்தில் இயக்குநர் தமிழ் எழுத்தில் வெளியான படம் சிறை. விக்ரம் பிரபுவுக்கு 25வது படம். தயாரிப்பாளர் லலித்தின் மகன் அக்ஷய் குமார் நல்ல அறிமுகம். விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வருகிறது.

310
3. பைசன்

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரித்த படம். இந்திய கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாற்றை பேசிய படம்‌. துருவ்வுக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் 75 கோடிகள் வரை வசூல் செய்தது.

410
4. லெவன்

நவீன் சந்திரா நடிப்பில் லோகேஷ் அஜுல்ஷ் இயக்கத்தில் வெளியான படம். தியேட்டரில் ஆரம்பத்தில் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. ஆனால் அதன் விமர்சனம் மூலமாக கவனத்தை ஈர்த்து வெற்றியை சுவை பார்த்தது. ஓடிடியில் பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்தது. யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸ் படம் இந்த ஆண்டில் இதுதான்.

510
5. குடும்பஸ்தன்

மணிகண்டன் நடிப்பில் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளியான படம். இன்றைய பல இளைஞர்களின் சூழலை பேசியதால் நிறைய பேருக்கு இப்படம் கனெக்ட் ஆனது. அதன் காரணமாக பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது. வசூல் ரீதியாகவும் இப்படம் 40 கோடிகள் வரை வசூல் செய்தது.

610
6. மதகஜராஜா

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி மற்றும் அஞ்சலி என பெரிய நட்சத்திர கூட்டணியில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கிடப்பில் இருந்து ஒருவழியாக இந்த பொங்கலுக்கு வெளியான படம் இது. ‌‌கதை பெரிதாக இல்லாவிட்டாலும் சந்தானம் காமெடிகள் பட்டைய கிளப்பியது. 65 கோடிகள் வரை வசூல் செய்து இந்த 2025 இன் முதல் வெற்றி படம் இது.

710
7. டிராகன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் மற்றும் மிஷ்கின் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் டிராகன். வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்படம் 38 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.151 கோடி வசூல் செய்தது.

810
8. சக்தித் திருமகன்

விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான படம். சமகால அரசியலை தெளிவாக தைரியமாக பேசிய படம்‌. முதல் பாதி அட்டகாசம். இரண்டு பாதி கொஞ்சம் சறுக்கல். இல்லையெனில் இந்த ஆண்டின் நம்பர்.1 படமாக கூட வந்திருக்கும். விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது.

910
9. டிஎன்ஏ

அதர்வா,நிமிஷா மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான படம்.‌ குழந்தை திருட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அதர்வாக்கு கம்பேக் படமாக அமைந்தது.

1010
10. எமகாதகி

பெரிதும் தெரியாத சின்ன சின்ன நடிகர்கள் நடிப்பில் வித்தியாசமான ஹாரர் படமாக வெளியானது. தியேட்டரில் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டிய படம். ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories