ஒரு தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் வெற்றிவாகை சூடிவிட்ட இலங்கையை சேர்ந்த தமிழரான இவர், சமூக சேவையிலும் தாராள மனசுக்காரர். இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக நூற்றுக்கணக்கான வீடுகளை கட்டி கொடுத்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு, உணவு, உடை, கல்வி, என பல்வேறு வகையில் உதவிகள் செய்து வருகிறார். விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகள் என இவரது சேவைகள் நீண்டு கொண்டே செல்கிறது. சமீபத்தில் கூட சமூக சேவைகளைப் பாராட்டி மலேசியாவில் உள்ள அமிஸ்ட் (ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி) சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.