காமெடி கலந்த ஹாரர் மூவியாக கடந்த 2005-ல் வெளியாகிய படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதில் வரும் நகைசுவை சீன்கள் இன்றளவும் பிரபலம் தான். மனோதத்துவ நிபுணராக வரும் ரஜினி, சந்திரமுகி தாக்கத்தால் மாறிய கங்கவாக வரும் ஜோதிகா, முருகேஸனாக வரும் வடிவேலு என நட்சத்திரங்கள் உச்சகட்ட எண்டர்டெயின்மெண்ட் பேக்கை ரசிகர்களுக்கு கொடுத்தது.