லோகேஷுக்கு இதே வேலையா போச்சு... ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு மர்டர், கூலியில் மர்டர் செய்தது யாரைத் தெரியுமா?

Published : Aug 14, 2025, 07:23 PM IST

Lokesh Kanagaraj Movies Contract Killer Revealed : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ஒவ்வொரு படத்திலேயும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மர்டர் செய்த நிலையில் கூலி படத்தில் அவர் எந்த கேரக்டரை குளோஸ் பண்ணிருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
16
ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு மர்டர், கூலியில் மர்டர் செய்தது யாரைத் தெரியுமா?

Lokesh Kanagaraj Movies Contract Killer Revealed : முதல் முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான படம் தான் கூலி. 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒன்மேன் ஆர்மியாக ரஜினிகாந்த் படம் முழவதையும் தனது தோளில் சுமந்து சென்றுள்ளார். மேலும், மற்ற நடிகர், நடிகைகள் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்து தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

26
கூலி படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யாரை மர்டர் செய்தார்?

முழுக்க முழுக்க ரஜினிக்கான படமாக எடுத்த நிலையில், அங்கங்கு சில குறைபாடுகளும் தெரிகிறது. மேலும், அனிருத் இசையும், ரஜினிகாந்த் மற்றும் சௌபின் ஷாகீரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மேலும், சிறப்பு தோற்றத்தில் வரும் ஆமீர் கான் தன் பங்கிற்கு தனது வேலையை சரியாக செய்து முடித்துள்ளார்.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே தனி மாடுலேஷன் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு படத்திலேயும் யூனிக் ஸ்டைலை அவர் பாலோ பண்ணிட்டு தான் வந்திருக்கிறார். கூலி படத்திலும் அவரது யூனிக் ஸ்டைல் தொடரத்தான் செய்திருக்கிறது. அது என்ன என்று பார்ப்பதற்கு முன்னதாக மற்ற படங்களில் அவர் என்ன செய்திருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.

36
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் டிரேட் மார்க்

லோகேஷ் கனகராஜினி சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஸ்டைலில் கைதி படத்தில் போலீஸ் ஸ்டேஷனிலேயே போலீசுகு உதவிய கல்லூரி மாணவர் ஒருவர் கொல்லப்படுவார். இதே போன்று லோகேஷ் கனகராஜின் 2ஆவது சினிமாட்டிக் படமான விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டீனா கொல்லப்படுவார். அடுத்ததாக லோகேஷின் 3ஆவது சினிமாட்டிக் படமான லியோ படத்தில் விஜய்யின் டுவின் சிஸ்டராக நடித்த மடோனா செபாஸ்டியனும் கொல்லப்படுவார்.

இந்தப் பட்டியலில் இன்று வெளியாகியிருக்கும் படமான கூலி படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக நடித்திருந்த சத்யராஜூம் மாஃபியா கும்பலால கொல்லப்படுவார். இப்படி ஒவ்வொரு படத்திலும் லோகேஷ் கனஜராஜ் தனக்கான ஸ்டைலையும், மெத்தேடையும் பாலோ பண்ணியே வந்திருக்கிறார்.

46
கூலி படத்தின் கதை:

துறைமுக மாஃபியா டானாக நடித்திருந்த நாகர்ஜூனா துறைமுகத்தில் சட்டவிரோதமாக வியாபாரங்களை செய்து வருகிறார். அவருடன் சௌபின் ஷாகிர் பணியாற்றி வருகிறார். அப்படி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் பற்றி அறிந்து கொள்ள காவல்துறை ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடித்து கொலை செய்வது தான் தயாளனாக நடித்திருக்கும் சௌபின் ஷாகீரின் வேலை. இதேபோல், ரஜினிகாந்தின் (தேவா) நண்பரான ராஜசேகரை (சத்யராஜ்) தயாள் கொலை செய்கிறார். ராஜசேகரின் உடலைப் பார்க்க அவரது நண்பர் தேவா வருகிறார். ஆனால் ராஜசேகரின் மகள் பிரீத்தி (ஸ்ருதி ஹாசன்) தந்தையைப் பார்க்க அனுமதிக்காமல் தேவாவைத் தடுக்கிறார்.

56
ரஜினிகாந்தின் கூலி விமர்சனம்

மாஃபியாவால் ராஜசேகர் இறந்ததையும், அவர்களால் பிரீத்திக்கும், அவளது தங்கைக்கும் ஆபத்து இருப்பதையும் அறிந்த தேவா, அவர்களைக் காப்பாற்ற களத்தில் இறங்குகிறார். தனது நண்பரின் குடும்பத்திற்காக எதையும் செய்யத் தயாராகிறார் தேவா. மறுபுறம், சைமனின் சட்டவிரோத வியாபாரங்களும், தயாளின் கொலைகளும் தொடர்கின்றன. சைமன் நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்படுகின்றனர். இறுதியில் சைமனின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தாரா தேவா?, இல்லையா என்பது தான் கூலி படத்தின் மீதி கதை.

66
கூலி படத்தின் விமர்சனம்

இது போன்று கதைகள் தமிழ் சினிமாவில் வெளியாகியிருந்தாலும், கூலி படத்தை வித்தியாசமான கோணத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து கூலி படத்தை இயக்கி இன்று வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிறார். படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம், வில்லனுக்கும் சரி, எமோஷனல் காட்சிகளுக்கும் சரி இயக்குநர் கொஞ்சம் கூடுதலாகவே மெனக்கெட்டிருக்கலாம்.

ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதால் படத்தில் ஆக்‌ஷன் காட்சிக்கு எந்த குறையும் இல்லை. ஆனால், செண்டிமெண்ட் என்று பார்க்கும் போது இன்னும் கூடுதலாக பணியாற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழ் ரசிகர்களுக்கு என்னதான் ஆக்‌ஷன் காட்சிகள் பிடித்தாலும் கூடுதலாக செண்டிமெண்ட் காட்சிகளையும் விரும்புவார்கள். இதுவரையில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் ரஜினியின் இமேஜ்ஜை பார்த்து பார்த்து கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories