OTT : பிளாஸ்ட் முதல் லிங்கம் வரை... ஜூன் 22 முதல் 27 வரை ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?

Published : Jun 22, 2026, 12:05 PM IST

This Week OTT Releases : இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்துக்கிட்டு இருக்கு. ஆக்‌ஷன், த்ரில்லர், ரொமான்ஸ்னு பல ஜானர்கள்ல புதுப் படங்கள், வெப் சீரிஸ் வெளியாகுது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். உலகம் முழுக்க பிரபலமான சீரிஸ்களோட புது சீசன்கள், பெரிய படங்கள், ரியாலிட்டி ஷோக்கள்னு வரிசையா ரிலீஸுக்குத் தயாராகி இருக்கு. அர்ஜுன் நடிச்ச 'பிளாஸ்ட்', க்ரைம் த்ரில்லரான 'லிங்கம்' மாதிரியான படங்கள் வெளியாகுது. முழு விவரங்களையும் இந்த போட்டோ கேலரியில பார்க்கலாம்.

பிளாஸ்ட்

அர்ஜுன் சர்ஜா, பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்ச தமிழ் ஆக்‌ஷன் படம்தான் 'பிளாஸ்ட்'. தியேட்டர்ல நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இப்போ ஓடிடி ரசிகர்களுக்காக வருது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 25ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் உலகப் புகழ்பெற்ற 'அவதார்' வரிசையில மூணாவது படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' வருது. போன வருஷம் டிசம்பர்ல தியேட்டர்ல ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடிச்ச இந்தப் படம், இப்போ ஓடிடி ரசிகர்களை மகிழ்விக்கத் தயாரா இருக்கு. ஜூன் 24 முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.

சீ யூ அட் வொர்க்

இது ஒரு ஆபீஸ் காதல் கதையை மையமா கொண்ட கொரியன் சீரிஸ். வேலை வாழ்க்கை, உறவுகள், ஒழுக்கம் இதுக்கு நடுவுல நடக்குற கதை ரசிகர்களைக் கவரும்னு எதிர்பார்க்கப்படுது. அமேசான் பிரைம் வீடியோவில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

24
இந்த வார ஓடிடி ரிலீஸ் வெப் தொடர்கள்

லிங்கம்

கபடி சாம்பியனா இருக்கிற ஒரு இளைஞன், கொலை வழக்குல சிக்கி எப்படி குற்ற உலகத்துக்குள்ள தள்ளப்படுறான்னு சொல்ற கதைதான் இந்த தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ். இதுல கதிர் முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சிருக்கார். ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஜூன் 26 முதல் பார்க்கலாம்.

தி பேர் – சீசன் 5

நிறைய எம்மி விருதுகளை வாங்கின இந்த சீரிஸ், அஞ்சாவது சீசனோட முடியப்போகுது. சமையல் உலகத்தை மையமா வெச்சு நடக்குற இந்தக் கதை, கடைசி கட்டத்தை எட்டுனதால எதிர்பார்ப்பு அதிகமாயிருக்கு. ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜூன் 26ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஹவுஸ் ஆஃப் தி டிராகன் – சீசன் 3

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபஞ்சத்தோட ஒரு பகுதியான 'ஹவுஸ் ஆஃப் தி டிராகன்' சீரிஸோட மூணாவது சீசன் வருது. பிளாக்ஸ், கிரீன்ஸ் இடையே நடக்கிற போர் இன்னும் விறுவிறுப்பாக மாறப்போகுது. இந்த சீசன் தான் இதுவரைக்கும் வந்ததிலேயே பெஸ்ட்னு முதல் விமர்சனங்கள் சொல்லுது. ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஜூன் 22 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

கிராம சிகித்சாலய் – சீசன் 2

டாக்டர் பிரபாத், டாக்டர் கார்கி கதாபாத்திரங்கள் மறுபடியும் ரசிகர்களை மகிவிக்க வராங்க. கிராமப்புற இந்தியாவை பின்னணியா கொண்ட இந்த மெடிக்கல் டிராமாவுல புதுக் கதைகளும், புது அனுபவங்களும் இருக்கும். அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஜூன் 22 முதல் பார்க்கலாம்.

34
இந்த வார ஓடிடி வெளியீடுகள்

அலையன்ஸ்

நெதர்லாந்துல ஹிட்டான ஒரு நிகழ்ச்சியோட இந்திய வடிவம்தான் 'அலையன்ஸ்'. 16 போட்டியாளர்கள் ஜோடிகளா விளையாட்டுக்குள்ள நுழைவாங்க. ஆனா, விளையாட்டு போகப்போக எந்த உறவும் நிரந்தரம் இல்லைன்னு அவங்க புரிஞ்சுக்குவாங்க. கடைசியில ஒருத்தர் தான் வெற்றியாளரா இருப்பாங்க. இந்த நிகழ்ச்சிக்கு குணால் கெமு தொகுப்பாளரா இருக்கார். அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் ஜூன் 26ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

கிறிஸ் அண்ட் மார்டினா: தி ஃபைனல் செட்

பல வருஷமா மகளிர் டென்னிஸ் உலகத்தை ஆண்ட கிறிஸ் எவர்ட், மார்டினா நவரதிலோவா ஆகியோரோட வாழ்க்கையையும், அவங்களோட நட்பையும் சொல்ற டாக்குமென்டரி படம் இது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஜூன் 26 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

லிட்டில் பிரதர்

ஜான் சீனா முக்கிய கதாபாத்திரத்துல நடிச்ச ஒரு காமெடிப் படம். பொறுப்பில்லாம இருக்கிற தம்பிகிட்ட ஒரு அண்ணன் படுற பாட்டை காமெடியா சொல்லியிருக்காங்க. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 26ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஏஜென்ட் கிம் ரீஆக்டிவேட்டட்

முன்னாள் ரகசிய ஏஜென்டான கிம் டோ-ஹியோன், தன் மகளைக் கடத்தினதுக்கு அப்புறம், மறுபடியும் தன்னோட பழைய திறமைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுறார். இதை மையமா வெச்சு இந்த கொரியன் க்ரைம் த்ரில்லர் கதை நகருது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஜூன் 26ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

44
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்கள்

அனதர் செல்ஃப் – சீசன் 3

ஆடா, செவ்கி, லைலா ஆகியோரோட வாழ்க்கையைச் சுற்றி நடக்குற இந்தக் கதை, மூணாவது சீசனோட தொடருது. அவங்க தங்களோட வேர்களைத் தேடிப் போற பயணம் தான் இந்த சீரிஸோட முக்கிய அம்சம். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி பிளாட்ஃபார்மில் ஜூன் 24 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

லாக் அப் – சீசன் 2

பாலிவுட் பிரபலங்களான ரித்தேஷ் தேஷ்முக், ஃபரா கான் இந்த சீசனை தொகுத்து வழங்குறாங்க. 'சச் யா சஜா' (உண்மையா அல்லது தண்டனையா) என்ற தீம்ல உருவாகுற இந்த நிகழ்ச்சியில பல டிவி, ஓடிடி பிரபலங்கள் கலந்துக்கிறதா தகவல். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஜூன் 27 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.

பெர்ஃபெக்ட் ஃபேமிலி – சீசன் 2

குல்ஷன் தேவையா, மனோஜ் பஹ்வா, சீமா, கிரிஜா ஓக் கோட்போலே, நேஹா தூபியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள்ல நடிச்ச இந்த காமெடி டிராமா சீரிஸ், ரெண்டாவது சீசனோட திரும்பி வருது. இந்த வெப் தொடர் சோனிலிவ் ஓடிடியில் ஜூன் 26ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories