பிளாக் பாண்டியின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதி இருக்கும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,' தமிழக மக்களிடமிருந்து அத்தியாவசிய பொருட்களை சேகரித்து நீங்களாகவே எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணி ஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும் மறுபடியும் உயிர் கொடுத்திருக்கிறது. நீங்களே குறிப்பிட்டது போல், வெறும் வாய்ச் சொல்லால் மட்டுமன்றி செயலாலும் இந்தியா எமது மக்களை நேசிக்கின்றது என்பதை உங்கள் ‘உதவும் மனிதம்’ வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே, நம்பிக்கையோடு உங்கள் பணிகளை ஆரம்பிக்கலாம். இது குறித்து ஈழத்தமிழ் மக்களின் சார்பாகவும், இலங்கை அரசு சார்பாகவும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். உங்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களை எமது கப்பல் சேவை மூலம்கொண்டு வர நான் ஆவன செய்கிறேன் என உறுதி கூறியுள்ளார்.