அடுத்த படத்திற்கு ரெடியான லெஜண்ட் சரவணன்..அவரே சொன்ன அப்டேட் இதோ!

Kanmani P   | Asianet News
Published : May 31, 2022, 04:41 PM IST

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் லெஜண்ட் சரவணன் தற்போது நடித்துள்ள படம் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
அடுத்த படத்திற்கு ரெடியான லெஜண்ட் சரவணன்..அவரே சொன்ன அப்டேட் இதோ!
the legend

தொழிலதிபர் சரவணனின் தி லெஜண்ட் படத்தின் டிரெய்லர் மே 29 ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. சரவணன் லெஜண்ட் சரவணன் என்று அழைக்கப்படுகிறார். திரைப்பட தயாரிப்பாளர் ஜோடியான ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஊர்வசி ரவுத்தேலா, சுமன், கீதிகா, புகழ், பிரபு, மறைந்த விவேக், விஜயகுமார், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா மற்றும் நாசர் உள்ளிட்ட நடிகர்கள் குழுமத்தில் நடித்துள்ளனர்.

24
the legend

இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாக  உள்ளார். டிரெய்லரின் இரண்டாம் பாதி அவர் சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு வேல்ராஜ், படத்தொகுப்பு ரூபன். கலை இயக்குநராக எஸ்.எஸ்.மூர்த்தியும், நடன அமைப்பாளர்களாக ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

34
the legend

லெஜண்டின் பாடல்களை பாடலாசிரியர்களான கபிலன், பி.ஆர்.விஜய், சினேகன், மதன் கார்க்கி மற்றும் வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் நாயகன் தி நியூ லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷனின் முதல் தயாரிப்பு முயற்சியாக  இப்படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்புக்குழு எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

44
the legend

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு  சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த  விழாவில் பேசிய லெஜண்ட் சரவணன் நிச்சயம் இரண்டாவது படத்தில் நடிப்பேன் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories