1.25 கோடி பணம் கேட்டு மிரட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன்... ஆதாரத்தோடு வெளியிட்ட வனிதா!

First Published Jul 30, 2020, 5:06 PM IST

லட்சுமி ராமகிருஷ்ணன், பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகை வனிதா, அவர் வனிதாவுக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீசை வெளியிட்டு ரசிகர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
 

தன்னுடைய விஷயத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தலையிட்டதற்காக, வனிதா ஊடகத்தின் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நாகரிமற்ற முறையில் பேசி, லட்சுமி ராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கினார். இவரின் இந்த பேச்சை கண்டிக்கும் விதமாக லட்சுமி ராமகிருஷ்னன் தற்போது வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
undefined
வனிதா - பீட்டர் பால் 3வது திருமண விவகாரம் குறித்து நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த வாரத்தில் தன்னுடைய கருத்து தெரிவித்திருந்தார். இப்பொழுது தான் அந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” என கேள்வி எழுப்பியிருந்தார்.
undefined
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த வனிதா, நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எவ்வித கருத்தையும் நீங்கள் சொல்ல வேண்டாம் என கடுப்பாக பதிலளித்துள்ளார்.
undefined
இதையடுத்து தனது ட்வீட்டை நீக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான் .
undefined
பின்னர், வனிதா திருமணம் செய்துள்ள பீட்டர் பால் மனைவிக்கு ஆதரவாக, டிவி நிகழ்ச்சியை போலவே, போன் மூலம் எலிசபெத் ஹெலன் வாழ்க்கை, திருமணம், பிள்ளைகள், தற்போதைய நிலை.... வனிதா பீட்டர் பால் வாழ்க்கையில் வந்தது எப்படி என பல்வேறு விஷயங்களை கேட்டு அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
undefined
இந்த பேட்டி பார்த்து கடுப்பான வனிதா, ஆன்லைன் பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் பேச வாய்ப்பு கிடைத்ததும் அவரை தாறு மாறாக விமர்சித்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல்... வாடி... போடி... என சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கினார்.இந்த பேட்டி பார்த்து கடுப்பான வனிதா, ஆன்லைன் பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் பேச வாய்ப்பு கிடைத்ததும் அவரை தாறு மாறாக விமர்சித்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல்... வாடி... போடி... என சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கினார்.
undefined
இவரை மட்டும் இன்றி இவருடைய கணவரையும் இந்த பிரச்சனைக்குள் கொண்டு வந்து, உன்னை கிழிக்க தான் வந்தேன் என இருவரும் ஒரு கட்டத்தில் மாறி மாறி திட்டிக்கொண்டது குழாய்யடி சண்டையை மிஞ்சியது.
undefined
இந்த பிரச்சனை முடிந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், தற்போது இந்த பிரச்சனை சம்மந்தமாக லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவுக்கு வக்கீல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
undefined
இதில் “ யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த நேர்காணலின் போது வனிதா விஜயகுமார் என்னையும், எனது கணவரையும் அநாகரிகமான வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான் அந்த சேனலை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே தவறாக பேசினார். பின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நானும் எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமாருக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
undefined
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸில், 1 .25 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்து, வனிதா அவர் அனுப்பிய அந்த நோட்டீஸ் காப்பி ஒன்றையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பிரச்னையை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார் வனிதா.
undefined
click me!