மெசேஜில் பேசுவேன்... விஷால் திருமணம் குறித்து லட்சுமி மேனன் இப்படி சொல்லிட்டாரே..?

First Published | Sep 5, 2020, 3:51 PM IST

மெசேஜில் பேசுவேன்... விஷால் திருமணம் குறித்து லட்சுமி மேனன் இப்படி சொல்லிட்டாரே..? 
 

நடிகர் விஷாலுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர்களில் ஒருவர் நடிகை லட்சுமி மேனன்.
இருவரும் நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு என அடுத்தடுத்து இணைந்து நடித்ததால் இவர்கள் காதலிப்பதாக பல தகவல்கள் வெளியானது.
Tap to resize

மேலும் இருவரும் நெருக்கமான காட்சிகளிலும் நடித்தனர்.
பின்னர் வரலக்ஷ்மியுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார் விஷால் என்பது அனைவரும் அறிந்தது தான் .
ஆனால் காதல் கிசுகிசுவில் சிக்கிய யாரையும் நிச்சயதார்த்தம் செய்யாமல் திடீர் என ஆந்திராவை சேர்ந்த நடிகையும் தொழிலதிபரின் மகளுமான அனிஷா என்கிற பெண்ணுடன் விஷாலுக்கு நிச்சயம் முடிந்தது.
ஆனால் இதுவரை திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் , முதல் முறையாக லட்சுமி மேனன் விஷால் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் எப்போதாவது விஷாலிடம் மெசேஜில் பேசுவேன். அவருடைய திருமணத்திற்கு விஷால் கல்யாணத்திற்கு கூப்பிட்டால் போவேன், அப்போது சூழல் எப்படி இருக்கிறது என்பதை முதலில் பார்ப்பேன் என கூறியுள்ளார்.

Latest Videos

click me!