தமிழ் திரையுலகில் தற்போது டாப் காதல் ஜோடியாக வலம் வருவது நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களுடைய காதல் ஜோதி ஒளிவீசி வருகிறது.
ஷூட்டிங், ஃபாரின் டூர் என நயன்தாரா எங்கு சென்றாலும் விக்கி இல்லாமல் போவது கிடையாது. இதுதொடர்பான ஏராளமான போட்டோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
கடந்த டிசம்பர் மாதம் 14ம் ஐதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட ஷூட்டிங் நடைபெற்றது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த ஷூட்டிங்கின் போது அதில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அனைவரும் சென்னை திரும்பினர். அப்போது கூட காதலி நயன்தாராவை விக்கி தான் பத்திரமாக அழைத்து வந்தார். அப்போது நயனை அக்கறையுடன் கைபிடித்து அழைத்து வந்த விக்கியின் போட்டோஸ் லைக்குகளை குவித்தது.
டிசம்பர் 23ம் தேதி ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021 மார்ச் 15ல் மீண்டும் சென்னையில் தொடங்கியது.முதலில் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
கொரோனா 2வது தீவிரமடைந்து வருவதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இதனிடையே அண்ணாத்த பட ஷூட்டிங்கில் நயன்தாராவும் பங்கேற்றுள்ளார்.
“அண்ணாத்த” பட ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக சற்று முன் தனி விமானத்தில் ஐதராபாத்தில் தரையிரங்கிய நயன்தாராவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வெள்ளை நிற சட்டை, அதுக்கு மேட்சிங்காக வெள்ளை கலர் மாஸ்க், முட்டியில் கிழிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்ட், கண்ணுக்கு கறுப்பு கலர் கண்ணாடி என செம்ம கெத்தாக விமான நிலையத்தில் நடந்து செல்லும் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா?, நயன்தாரா ஸ்டைலே தனியப்பா... என சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.சிலரோ நயன்தாரா இங்கே? விக்னேஷ் சிவன் எங்கே? என கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த முறை நயன் “அண்ணாத்த” ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்ற போது, விக்கியும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” பட ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.