இதன் காரணமாக, 'கர்ணன்' படத்தை கூட மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெளிநாட்டில் தான் பார்த்தார் தனுஷ்.
தனுஷ், நடித்துவரும் ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வரும் தனுஷ், தற்போது மனைவி , மற்றும் சக நடிகருடன் அவுட்டிங் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக செம்ம ஸ்டைலிஷாக உடை அணைந்து, கப்பலில் நின்றபடி போஸ் கொடுக்கும் மனைவியை தனுஷ் புகைப்படம் எடுக்கிறார்.
சக நடிகருடனும் இவர் எடுத்து கொண்ட புகைப்படங்களும், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக 3 மாதங்கள் ஹாலிவுட் படப்பிடிப்பில் தனுஷ் பங்கேற்கும் நிலையில், முதல் முதலாக... அவர் வெளியில் செல்லும் போது, நடு கடலில் கப்பலில் இருந்தபடி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாய்க்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.