இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு.
90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர்.
அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.
பருவ வயதான 2 மகள்களின் தாய், அன்பான கணவர் என ஹாப்பியாக போய்கொண்டிருக்கிறது குஷ்புவின் வாழ்க்கை.
தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ள குஷ்பு அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
1995ம் ஆண்டு ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமனி நடித்த முறைமாமன் படத்தை சுந்தர் சி இயக்கினார்.
அப்போது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் தீ பற்றியது.
5 ஆண்டுகள் காதலித்த வந்த இருவரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
சினேகா - பிரசன்னா, சூர்யா - ஜோதிகா என பல நட்சத்திர தம்பதிகள் தற்போது கோலிவுட்டில் வலம் வந்தாலும், இன்றளவும் பலரும் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வாழ்த்து வரும் க்யூட் ஜோடி குஷ்பு - சுந்தர் சி தான்.
அப்போதே என்ன அழகில் இருக்கிறார் என்பதை பாருங்கள்
இயக்குனர் கே.பாலச்சந்தருடன் குஷ்பு
மாமியாரின் அன்பு அரவணைப்பில் மருமகள் குஷ்பு
திருமண கோலத்தில் குஷ்பு - சுந்தர் சி