பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.
பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும் அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் இருவரும் ஒருவர். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது லாஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது. அதன் படி நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship ' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லாஸ்லியா தமிழில் அறிமுகமாக உள்ள இந்த இரண்டு படங்களுக்கும் கிட்டத்தட்ட 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்து வாய்ப்புகளை அள்ளி வரும் லாஸ்லியாவிற்கு அடுத்த ஜாக்பாட்டாக பூரணேஷ் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திலும் லாஸ்லியாவிற்கு நல்ல சம்பளம் எனக்கூறப்படுகிறது.
ஏற்கனவே சின்னத்திரை நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள் என கலக்கி வந்த லாஸ்லியா, தற்போது டி.வி. விளம்பரங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
சோப் விளம்பரம் ஒன்றில் லாஸ்லியா நடித்த வீடியோ தற்போது டி.வி.களில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பல இளம் நடிகைகளுக்கு பட வாய்ப்பே கிடைக்காத போது இவர் மட்டும் இப்படி வளைச்சி, வளைச்சி கல்லா கட்டுவதை பார்த்து சிலர் பொறாமையில் உள்ளதாக செய்தி.