கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... மெல்லிய கறுப்பு புடவையில் மனதை அள்ளும் கிளிக்ஸ்...!

First Published | Sep 28, 2020, 7:09 PM IST

கொழு கொழுன்னு இருந்த தமிழ் காமெடி நடிகை வித்யுலேகா ராமன் ஸ்லிம் லுக்கிற்கு மாறிய பிறகு மெல்லிய புடவையில் சிம்பிள் அண்ட் க்யூட்டாக வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார்.
அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.
Tap to resize

பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சிகளில் இறங்கியிருந்த வித்யுலேகா லாக்டவுன் நேரத்தில் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.
கடந்த 26ம் தேதி வித்யுலேகா ராமனுக்கும், சஞ்சய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். நிச்சயதார்த்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம ஸ்லிம்மாக மாறிப்போன வித்யுலேகா ராமனின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது.
தற்போது ஸ்லிம் லுக்கிற்கு மாறிய வித்யுலேகா ராமன் மெல்லிய கறுப்பு நிற புடவையில் கலக்கலான போட்டோஸை வெளியிட்டுள்ளார்.
பிளெயின் கருப்பு புடை அணிந்து அதற்கு மேட்சாக கலம்காரி பிளவுஸ் அணிந்திருக்கிறார்.
புடவைக்கு ஏற்ப சில்வர் ஜிமிக்கி கம்மல், வளையல் அணிந்திருக்கிரார். கைகளில் பெரிய அளவிலான மோதிரம் பக்கா ஸ்டேட்மெண்ட் லுக்கை தருகிறது.
புடவையில் எளிமைக்கு ஏற்ப அவரின் மேக்அப்பையும் எளிமையாக போட்டுள்ளார்.
அதேபோல் புடவை மற்றும் மேக்கப்பிற்கு ஏற்றவாறு அவருடைய ஹேர் ஸ்டைலும் பட்டையைக் கிளப்பி வருகிறது.

Latest Videos

click me!