பிரபல காமெடி நடிகருக்கு விரைவில் திருமணம்... கைகூடப்போகும் 4 ஆண்டு காதல்... காதலியை கரம்பிடிக்கிறார்!

Published : Jun 20, 2020, 01:39 PM IST

அஸ்வின் கடந்த 4 வருடமாக வித்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

PREV
18
பிரபல காமெடி நடிகருக்கு விரைவில் திருமணம்... கைகூடப்போகும் 4 ஆண்டு   காதல்... காதலியை கரம்பிடிக்கிறார்!

கோலிவுட்டில் உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், புதுப்பேட்டை உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சுவாமிநாதன். இவருடைய மகனான அஸ்வின் ராஜா, தற்போது திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். 

28

ராஜேஷ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரனின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து வந்தான் வென்றான், முப்பொழும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தார். 

38

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படம் அஸ்வினுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. 

48

அந்த படத்தில் தம்பி ராமையாவுடன் சேர்ந்து அஸ்வின் நடித்த காமெடி காட்சிகள் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டானது. 

58

அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கும்கி அஸ்வின் என்று தான் ரசிகர்கள் இவரை அழைக்கின்றனர். கும்கி படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து கணிதன், சண்டிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

68

அஸ்வின் கடந்த 4 வருடமாக வித்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

அஸ்வின் கடந்த 4 வருடமாக வித்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

78

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகளான வித்யஸ்ரீ அமெரிக்காவில்  “எம்.எஸ்.” பட்டம் பெற்றவர். இவர்களது காதலுக்கு இருவீட்டார் தரப்பிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.

88

இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் வரும் 24ம் தேதி சூளைமேட்டில் அஸ்வினின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் படி, எளிமையாக திருமணத்தை திட்டமிட்டுள்ளார்கள். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக திருமணத்தை எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories