பாகுபலியை 2 வை தூக்கி சாப்பிட்ட கேஜிஎஃப் 2... அசைக்கமுடியாத இடத்தை பிடித்த யாஷ்..

Kanmani P   | Asianet News
Published : Apr 15, 2022, 05:32 PM IST

பிரமாண்ட வசூல் சாதனை படித்திருந்த பாகுபலி 2 வசூல் சாதனையை கேஜிஎஃப் முறியடித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
17
பாகுபலியை 2 வை தூக்கி சாப்பிட்ட கேஜிஎஃப் 2... அசைக்கமுடியாத இடத்தை பிடித்த யாஷ்..
KGF 2

முதல் பாகத்தின் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மனதில் கே.ஜி.எஃப் விதைத்திருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு  வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வெளியாகியுள்ளது.

27
kgf 2

யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கே.ஜி.எஃப் 2. ரசிகர்களை கவர்ந்த அதே  மாஸோடு வெளியாகியுள்ளது.  தொடர்ந்து  பாசிடிவ் விமர்சனங்கள் வந்து குவிந்து வருகிறது..

37
KGF 2

5 மொழிகளில் டப் ஆகி  பான் இந்தியா படமாக கடந்த 14-பின் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்த படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

47
KGF 2

விஜயின் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக கே.ஜி.எஃப் 2  வெளியிடப்பட்டுள்ளது. இதில் பீஸ்ட் படம் 800க்கும் மேற்பட்ட திரைகளிலும், கே.ஜி.எஃப் 2 300க்கும் மேற்பட்ட திரைகளிலும் வெளியிடப்பட்டன

57
KGF 2

அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் பாக்ஸ் ஆபிஸில் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் பல்வேறு சாதனைகளை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

67
KGF 2

பீஸ்ட் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது  கே.ஜி.எஃப் 2 படத்துக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. அதோடு தமிழகத்தை தவற மற்ற இடங்களில் அதிகளவில் திரைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

77
KGF 2

இந்நிலையில் நேற்று வெளியான இந்த படம் பாகுபலி 2 வின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இந்தியிலும் வெளியாகியுள்ள KGF 2. அங்கு சுமார் ரூ. 53.95 கோடியை வசூலித்துள்ளது. முன்னதாக வெளியான பாகுபலி 2 ரூ.46.5 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories