கேஜிஎஃப் 2 எடிட்டிங்கில் தூள் கிளப்பிய இளம் யூட்யூப்பர்..பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்..

Kanmani P   | Asianet News
Published : Apr 15, 2022, 06:54 PM IST

கேஜிஎஃப் 2 வெற்றியை தொடர்ந்து தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகின்றனர்.

PREV
18
கேஜிஎஃப் 2 எடிட்டிங்கில் தூள் கிளப்பிய இளம் யூட்யூப்பர்..பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்..
kgf 2 Editor

யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கே.ஜி.எஃப் 2. வெளியான முதல் நாளே ரூ.100 கோடியை வசூல் செய்து மாஸ் கிளப்பியுள்ளது.

28
kgf 2

முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகமும் செம்ம மாஸாக இருப்பதால் இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் வந்து குவிந்துள்ளன.

38
kgf 2

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள இப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
 

48
kgf 2

யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் KGF. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. 

58
kgf 2

யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

68
kgf 2

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக மிரட்டியுள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து உள்ளார். மேலும் புவன் கவுடா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

78
kgf 2

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடும் படமாக உருவாகியுள்ளது. இதில் எடிட்டிங் முதல் பின்னணி இசை வரை மாஸ் காட்டி வருகிறது.

88
kgf 2 Editor 19 years old youngsters ujwal kulkarni

இந்நிலையில் இந்த படத்தின் ம்,மாஸ் எடிட்டிங்கிற்கு சொந்தக்காரர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. உஜ்வால் குல்கர்னி என்ற 19 வயது இளைஞர் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். இவர் யூடியூப் வீடியோக்கள் மற்றும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எடிட் செய்து பிரபலமானவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories