Bhavana : பாவனாவை கௌரவிக்கும் கேரளா...சர்வதேச திரைப்பட விழாவில் அங்கிகாரம்

Kanmani P   | Asianet News
Published : Mar 22, 2022, 07:16 PM IST

Bhavana : கேரளாவில் தொடங்கி உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பாவனா கவுரவிக்கப்பட்டு உள்ளார். அங்கு பாவனா தான் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைத்துள்ளார்.

PREV
18
Bhavana : பாவனாவை கௌரவிக்கும் கேரளா...சர்வதேச திரைப்பட விழாவில் அங்கிகாரம்
International Film Festival of Kerala

முன்னணி நாயகியாக வலம் வந்தவர் பாவனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பலவேறு மொழிகளில் நடித்துள்ளார். படங்களில் பிஸியாக இருந்த பாவனா கடந்த 2017-ம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்று வீடு திரும்பியபோது கடத்தப்பட்டார். விசாரணையில் ஒரு கும்பல் இவரை கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

28
International Film Festival of Kerala

இது குறித்த காவல்துறையினரின் விசாரணையில் பல பூதங்கள் கிளம்பின. முதலில் போலீஸார் பல்சர் சுனில் என்பவரை கைது செய்தனர். வாக்குமூலம் தந்த சுனில் மலையாள நடிகர் திலீப் தான் தங்களை இப்படி செய்யச் சொன்னதாக  கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  பின்னர் போலீசார் திலீப்பையும் கைது செய்து விசாரணை நடத்தினர். தற்போது திலீப் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

38
International Film Festival of Kerala

இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்த பாவனா..தனது சுயமரியாதை சுக்குநூறாகி விட்டதாகவும். இந்த சம்பவத்திற்கு பிறகு மலையாள திரையுலகம் தன்னை நிராகரித்து விட்டது. ஜெயசூர்யா, பிரித்விராஜ், ஷாஜி கைலாஷ், ஆசிக் அபு உள்ளிட்டவர்களை தவிர பிறரெல்லாம் என்னை ஒதுக்கி வைத்தனர்” என பாவனா கூறி உள்ளார். 

48
International Film Festival of Kerala

முன்னதாக இன்ஸ்டா பதிவு செய்திருந்த பாவனா, நீதியை நிலைநாட்டவும், தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், இனி யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் நான் இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன். என்னுடன் உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி. என கூறியிருந்தார். இந்த பதிவிற்கு கேரள முன்னணி நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

58
International Film Festival of Kerala

இந்நிலையில் கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது. முதலில் பாவனா பெயர் அந்த பட்டியலில் இல்லை. ஆனால் திடீர் என போராட்டத்தின் இன்னொரு பெண் வடிவமான பாவனாவை மேடைக்கு அழைக்கிறோம்" என தொகுப்பாளர் அழைத்தார். மறு நொடியே காரா ஓசங்கள் தெறிக்கவிட்டன.
 

68
International Film Festival of Kerala

கூட்டத்தினரின் ஆரவாரத்திற்கிடையே மேடைக்கு பிரவேசித்த பாவனாவை அங்கு அமர்ந்திருந்த மந்திரிகள் உட்பட  அனைவரும் எழுந்து நின்று பாவனாவுக்கு வரவேற்பு கொடுத்தனர். பாவனாவிற்கு சிறப்பு பூங்கொத்தும் கொடுக்கப்பட்டது.
 

78
International Film Festival of Kerala

பின்னர் பாவனா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய கேரள கலாசாரத் துறை மந்திரி ஷாஜி செரியன் பேசும்போது “கேரளத்தின் ரோல் மாடல் நீங்கள்" என்று பாவனாவை புகழ்ந்தார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. 

88
International Film Festival of Kerala

தவறு செய்தவர்கள் கௌரவமாக சுற்றித்திரிகையில் பாதிக்கப்பட்ட பெண் முடங்கி கிடப்பது சமூக நீதியாகிவிட்ட இந்த சூழல் பாவனாவின் துணிச்சல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. சர்வதேச திரைப்பட விழா குறித்த வீடியோக்களை பகிர்ந்துள்ள நடிகை பரவாது 'வெல்கம் பேக் பாவனா' என குறிப்பிட்டுள்ளார்.

 

Read more Photos on
click me!

Recommended Stories