கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள யூத் திரைப்படம் கடந்த மார்ச் 19ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில், அப்படத்தின் வசூல் சாதனை பற்றி இங்கே பார்க்கலாம்.
நடிகர் கருணாஸை போல் அவரது மகன் கென் கருணாஸும் சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். கென் கருணாஸ் இளம் வயதில் இருந்தே நடித்து வருகிறார். கருணாஸ் ஹீரோவாக நடித்த படங்களில் அவரது மகனாக நடித்திருக்கிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுக்கு மகனாக நடித்த அசுரன் படம் தான் கென் கருணாஸுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அசுரன் படத்துக்கு பின்னர் விடுதலை 2 படத்திலும் சிறிது நேரம் வந்தாலும் தன்னுடைய அசுரத் தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் அப்ளாஸ் வாங்கி இருந்தார் கென்.
25
கென் கருணாஸின் யூத்
கென் கருணாஸ் நடிகராக ஜொலிப்பார் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் அவர் யாரும் எதிர்பார்க்காத விதமாக, திடீர் சர்ப்ரைஸ் ஆக இயக்குனராக அவதாரம் எடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அவர் தான் யூத் என்கிற படத்தை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்க உள்ளதாக அறிவித்ததில் இருந்தே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்கிற அறிவிப்பு வெளியானதும் படம் கன்பார்ம் ஹிட் என்கிறா பேச்சு அடிபட தொடங்கியது.
35
சம்பளம் வாங்காத ஜீவி பிரகாஷ்
இப்படத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பளமே வாங்காமல் ஃப்ரீயாக இசையமைத்துக் கொடுத்துள்ளார் ஜீவி. இப்படத்திற்கு ஒரு அடையாளமாக அமைந்தது ஜீவி பிரகாஷின் இசை தான். அதிலும் இப்படத்தின் முதல் சிங்கிளாக வெளிவந்த முட்ட கலக்கி பாடல், சென்சேஷனல் ஹிட் அடித்து, படத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றது. தான் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ளாத தனுஷ், கென் கருணாஸுக்காக அவரின் யூத் பட விழாவில் முதல் ஆளாக கலந்துகொண்டு, படத்தை பற்றி பாராட்டி பேசி இருந்தார்.
இப்படி ரிலீசுக்கு முன்பே ஓவர் ஹைப் உடன் இருந்த யூத் படம் கடந்த மார்ச் 19ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அன்றைய தினம் வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆகாதது அப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்தது. இதனால் பெரும்பாலான தியேட்டர்களில் யூத் படம் தான் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்படத்திற்கு முதல் ஷோவில் இருந்தே பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதனால் யூத் படம் அடுத்தடுத்த ஷோக்களில் ஹவுஸ்ஃபுல் ஆகத் தொடங்கியது. கென் கருணாஸ் திறம்பட படத்தை இயக்கி இருப்பதாக நடிகர் சிம்பு உள்பட பிரபலங்கள் பலரும் வியந்து பாராட்டி இருந்தனர்.
55
வசூல் சாதனை
யூத் படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் ஞாயிற்றுக் கிழமை தான் அதிகபட்ச வசூலை வாரிக்குவித்துள்ளது. நேற்று மட்டும் ரூ.5.50 கோடி வசூலித்துள்ளதாம் யூத். இதன்மூலம் இதுவரை இந்தியாவில் இப்படம் 20.08 கோடி வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.23.68 கோடி வசூலித்திருக்கிறதாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லால் சலாம் படத்தின் லைஃப் டைம் வசூலே ரூ.23 கோடி தான். அந்த வசூலை நான்கே நாட்களில் அள்ளி சாதனை படைத்துள்ளது கென் கருணாஸின் யூத் திரைப்படம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.