நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்... பிரபல நடிகருடன் இப்படியொரு வேடத்தில் நடிக்கிறாரா?

First Published | Aug 20, 2020, 3:55 PM IST

பிரபாஸின் அடுத்த பிரம்மாண்ட படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாகவும், அதிலும் சூப்பர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.
இதன் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளம் அதிகரித்துவிட்டது.
Tap to resize

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிஞ்சும் அளவிற்கு அவருடைய அடுத்த படத்திற்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இன்னும் பெயரிடப்படாத பிரபாஸின் 21வது படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரபாஸுடன் சேர்ந்து தீபிகா படுகோனே நடிக்க உள்ளார். இரு தினங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிக்க 22வது படமான ஆதிபுருஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தாறுமாறு வைரலானது.
பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாக உள்ளது. மேலும் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.
ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் இயக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் கன்பார்ம் செய்யப்பட்டது.
முதன் முறையாக ராமர் வேடத்தில் நடிக்க உள்ள பிரபாஸின் சீதை யார் (அதாங்க ஹீரோயின்) என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது.
இந்நிலையில் சீதா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீதை கதாபாத்திரத்திற்கு நல்ல ஹோம்லி லுக்கான நடிகை வேண்டும் என்பதால் கீர்த்தி சுரேஷை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக நடிகை சாவித்ரியின் வரலாற்று படமான மகாநடி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது கிடைத்தது. இதனால் இந்த தேர்வு சரியானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக தெலுங்கில் வெளியான ராமராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதையாக நடித்ததும், அந்த கதாபாத்திரம் அவருக்கு படு கச்சிதமாக பொருந்தியதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!