Karthigai Deepam Karthik Raj and Revathi Romance : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் தீபாவிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக ரேவதிக்கு புதிதாக சேலை எடுத்து கொடுத்துள்ளார் கார்த்திக்கின் மாமியார். இதைப் பற்றி பார்க்கலாம்.
Karthigai Deepam Karthik Raj and Revathi Romance : கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி மற்றும் கார்த்திக்கிற்கு திருமணம் நடந்த பிறகு குடும்பத்தில் உள்ள எல்லா வேலைகளையும் கார்த்திக் தான் செய்கிறார். மேலும், சாமுண்டீஸ்வரி மற்றும் சிவனாண்டி பிரச்சனையானது இப்போது கார்த்திக் மற்றும் சிவனாண்டி பிரச்சனையாக மாறிவிட்டது. அதனால் கார்த்திக்கை பழிதீர்க்க சிவனாண்டியும், சந்திரலேகாவும் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
29
மகேஷை கடத்தி வைத்த சாமுண்டீஸ்வரி
இதற்காக ரேவதி மற்றும் மகேஷ் திருமணத்தை நடத்தி வைக்க துடித்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக சாமுண்டீஸ்வரியே மகேஷை கடத்தி வைக்க கார்த்திக் மற்றும் ரேவதி திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் ரேவதிக்கு உடன்பாடில்லை. கடைசியாக மகேஷ் பற்றி தெரியவர ரேவதிக்கு கார்த்திக் மீது காதல் ஏற்பட்டது. இதனால், ஆஸ்திரேலியா புறப்பட சென்ற ரேவதிக்கு விமான நிலையத்தில் கையில் அடிபட்ட நிலையில் வீடு திரும்பினார்.
39
ரோகிணி கர்ப்பம்:
இதைத் தொடர்ந்து ரோகிணி நீண்ட நாட்களுக்கு பிறகு கர்ப்பமானார். ஆனால், அதை பற்றி அவரது அம்மாவிடம் ஆசை ஆசையாக சொல்ல வந்தார். ஆனால், அம்மாவோ குடும்பத்தில் வாரிசு வந்தால் உங்களது குடும்ப பகை தீரும் என்று ஜோதிடர் கூறினார். இதைக் கேட்ட சாமுண்டீஸ்வரி தனது மகள் ரோகிணியிடம் நீ குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கண்டிஷன் போட்டார்.
49
சுவாதி கடத்தல்:
சுவாதியை வைத்து சாமுண்டீஸ்வரியை பழிதீர்க்க துடித்த சிவனாண்டி கடைசியில் ஏமாற்றம் அடைந்தார். இதற்கு காரணம் கார்த்திக் தான். பிரபல இசையமைப்பாளர் வைந்திருக்கிறார். உங்களது பாடல் அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது என்று கூறி ஹோட்டலுக்கு வரவைத்து சிவனாண்டியும், அவரது சித்தப்பாவும் அசிங்கப்படுத்த நினைத்தனர். ஆனால் சுவாதியை காப்பாற்றி சிவனாண்டியின் சித்தப்பாவிற்கு எச்சரிக்கை கொடுத்தார்.
59
நவீன் – துர்கா திருமணம்
கடைசியாக துர்காவை வைத்து சாமுண்டீஸ்வரியை பழிதீர்க்க திட்டம் போட்டுள்ளனர். இதற்காக துர்காவிற்கு வரன் அனுப்பி வைத்தனர். அவர்களோ எங்களது பணக்கார குடும்பம். ஆனால், யாருக்கும் தெரியாது. அதனால், உங்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டால் எங்களது குடும்பத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியவரும் என்று கூறி சாமுண்டீஸ்வரி குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொண்டனர்.
ஆனால், இதற்கிடையில் நவீன் மற்றும் துர்கா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். துர்காவிற்கு அம்மா ஏற்பாடு செய்து வைத்த திருமணத்தில் உடன்பாடு இல்லை. இதன் காரணமாக அவர் நவீனை ரகசிய திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பயந்து தூக்கு மாட்டிக் கொள்ள முயற்சித்தார். அப்போது ரேவதி அவரை தடுத்து நிறுத்தினார்.
69
கும்பாபிஷேகம்
கோயில் கும்பாபிஷேகம் முடியும் வரையில் நீ கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அதன் பிறகு நான் உன்னுடைய அம்மாவிடம் பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்றார். ஆனால், கோயில் கும்பாபிஷேகம் தான் எப்போது என்று இதுவரையில் தெரிவிக்கவில்லை. ஒருபுறம் கோயில் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
79
புதிய வரவு:
கார்த்திகை தீபம் சீரியலின் முதல் சீசனில் வரும் தீபாவின் அம்மாவும், அண்ணியும், இப்போது 2ஆவது சீசனிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் வந்து ஓரிரு எபிசோடுகளிலேயே ரேவதியுடன் நெருக்கமாகிவிட்டனர். ரேவதிக்கு தீபாவைப் பற்றி தெரிந்த நிலையில் அவரது கணவர் கார்த்திக்கை பற்றி இன்னும் தெரியவில்லை. தீபா மற்றும் கார்த்திக்கின் திருமண போட்டோவை பார்ப்பதற்குள்ளாக ரேவதிக்கு போன் வர உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
89
செங்கல்சூளையில் வேலை
தீபாவின் அம்மாவிற்கும், அண்ணிக்கும் தங்களது செங்கல்சூளையில் ரேவதி வேலை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் தான் கார்த்திக்கிற்கு அக்கா மற்றும் மாமியார் என்று எப்போது தெரியவரும் என்பது குறித்து தெரியவில்லை.
99
தீபாவிற்கு பிறந்தநாள் – ரேவதிக்கு புடவை:
இன்று தீபாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவரது அம்மா ரேவதியை வரச்சொல்லி அவருக்கு புதிதாக புடவை எடுத்துக் கொடுத்து கட்டிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கையில் போடப்பட்டிருந்த கட்டையும் அவிழ்த்துவிட்டு அதற்கு பதிலாக நாட்டு மருந்து அரைத்து தடவிட்டுள்ளார். இதே போன்று தீபாவின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக்கும் கோயிலுக்கு சென்று வந்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரசாதமாக குங்குமம் கொண்டு வந்துள்ளார். அதை எடுத்து ரேவதி நெற்றியில் வைத்துவிட்டுள்ளார். அப்போது ரேவதி புன்னகை மலர, கார்த்திக் கொஞ்சம் வெட்கப்பட்டுள்ளார். இந்த காட்சிகள் தான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.