Karthigai Deepam 2 Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் ரேவதி தனது காதலை சொல்ல வந்து ஏமாற்றம் அடைந்து திரும்ப சென்றதைத் தொடர்ந்து எப்படியாவது கார்த்திக் பற்றிய உண்மையை அக்காவிடம் சொல்ல வேண்டும் என்று சந்திர கலா புதிய திட்டம் தீட்டுகிறார்.
Karthigai Deepam 2 Today Episode : ஜீ 5 தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் மிக முக்கிய சீரியல் என்றால் அது கார்த்திகை தீபம் 2 தான். முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து ஒரு சில கதாபாத்திரங்களை மாற்றிய கதையையும் மாற்றி கார்த்திகை தீபம் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய இளம் யூத்களுக்கு பிடித்த சீரியல் என்றே சொல்லலாம். ஏனென்றால் காதல் ஜோடிகள் மற்றும் திருமணமான ஜோடிகள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்பதை இந்த தொடர் எடுத்துக் காட்டுகிறது.
26
ஆடிஷனில் வென்றாரா சுவாதி?
மொத்தத்தில் அன்றாடம் நம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த சீரியல். இதில், திருமணத்திற்கு பிறகு கார்த்திக்கை வெறுத்து வந்த ரேவதி இப்போது அவர் மீது ஆசை கொண்டு அவரை காதலிக்க தொடங்கிவிட்டார். எப்படியாவது தனது காதலை கார்த்திக்கிடம் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதற்காக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ரேவதி அவரிடம் காதலை சொல்லாமல் சென்றுவிட்டார்.
36
காதலை சொன்னாரா ரேவதி?
அதன் பிறகு கார்த்திக் சென்னை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அம்மா பெயரில் இருக்கும் ஆவணங்களை எல்லாம் அண்ணன், தம்பி பெயர்களுக்கு மாற்ற வேண்டிய சூழல் வந்துள்ளது. இதனால் கார்த்திக் சென்னை புறப்படுகிறார். அதுமட்டுமின்றி சுவாதிக்கு பாடுவதற்கான வாய்ப்பும் வந்துள்ளது. இதைப் பற்றி சுவாதியிடம் சொல்லி அவரை கையோடு கூட்டிச் செல்ல கார்த்திக் தயாரான நிலையில் ரேவதி தானும் உடன் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
46
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு
கார்த்திக் வேண்டாம் என்று சொல்ல மயில்வாகனம், கார்த்திக்கிடம் சொல்லி உடன் அனுப்பி வைக்கிறார். மூவரும் சென்னை புறப்பட்டனர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இந்த நிலையில்தான் இன்றைய எபிசோடில் கார்த்திக், ரேவதி மற்றும் சுவாதி மூவரும் சென்னை புறப்பட்ட விஷயத்தை சந்திரகலா உடனே தனது கணவர் சிவனாண்டியிடம் சொல்லிவிட்டார். அதன் பிறகு சிவனாண்டி கார்த்திக்கிற்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்.
56
சென்னை புறப்பட்டுச் சென்ற கார்த்திக், ரேவதி, சுவாதி
இன்றைய எபிசோடில் சென்னை வந்து சேரும் மூவரும் ஹோட்டலில் தங்குகின்றனர். இதில் கார்த்திக் தனி அறையில் தங்குகிறார். ரேவதி மற்றும் சுவாதி மூவரும் ஒரு அறையில் தங்குகின்றனர். அப்போது கிருஷ்ணன் என்பவர் தனது மகள் தான் செலக்ட் ஆக வேண்டும் என்று ஆடிஷன் நடத்துபவருக்கு போன் போடுகிறார்.
இதைக் கேட்டு கார்த்திக் பயப்படாதே திறமைக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று சுவாதிக்கு ஆறுதல் கூறுகிறார். அதன் பின்னர் தனது காதலை சொல்ல சென்ற ரேவதியிடம் கார்த்திக் தன்னுடைய பிரண்ட்டோட குழந்தையோட பர்த்டே பங்க்ஷன் இருப்பதாக பொய் சொல்லி விருகம்பாக்கம் ரெஜிஸ்டர் ஆபீஸிற்கு புறப்பட்டு செல்கிறார்.
66
கார்த்திகை தீபம் 2
அதன்பிறகு என்ன நடக்கிறது, கார்த்திக் பத்திரப்பதிவு ஆபிஸிற்கு சென்று ஆவணங்களை தங்களது பெயருக்கு மாற்றினாரா, ரேவதி தனது காதலை சொன்னாரா, சுவாதி ஆடிஷனில் வெற்றி பெற்றாரா இன்னும் பல சுவாரஸ்யங்களுடன் கார்த்திகை தீபம் 2 சீரியலை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.