புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் திரைக்கு வரும் தனுஷின் அம்பிகாபதி!

Published : Jul 09, 2025, 04:41 PM IST

dhanushs ambikapathy to re release with new climax scenes : தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற அம்பிகாபதி திரைப்படம் மீண்டும் வெளியாக இருக்கிறது.

PREV
15
ராஞ்சனா

dhanushs ambikapathy to re release with new climax scenes : இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் தான் அம்பிகாபதி. தனுஷ் முதல் முறையாக ராஞ்சனா என்ற படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சோனம் கபூர், ஐஸ்வாக் சிங், அபய் தியோல், ஸ்வாரா பாஸ்கர், விபின் சர்மா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

25
புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் வரும் அம்பிகாபதி

கலர் எல்லோவ் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கிருஷிகா லுல்லா தயாரித்திருதார். கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரூ.36 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.105 கோடி வரையில் வசூல் குவித்து புதிய சாதனை படைத்தது.

35
அம்பிகாபதி ரீ ரிலீஸ்

இந்தப் படம் தான் தமிழில் அம்பிகாபதி என்ற டைட்டிலில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம், தமிழகமெங்கும் பெரும் வசூல் வெற்றியைக் குவித்தது குறிப்பிடதக்கது. ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் ஒரு தலைக்காதலைச் சொல்லும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது.

45
தனுஷ் பிறந்தநாள்

இப்படம் தற்போது நவீன தொழில் நுட்பத்தில் பல்வேறு காட்சிகள் மெருக்கேற்றப்பட்டு, AI தொழில்நுட்பத்தில் புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன் வெளியிடப்படவுள்ளது. இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தினை, அப்விங் எண்டர்டயின்மெண்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், AI தொழில்நுட்பத்தில் புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி மீண்டும் தமிழகமெங்கும் வெளியிடவுள்ளது.

55
புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் திரைக்கு வரும் அம்பிகாபதி!

அருண் விஜய்யின் " தடையறதாக்க " படத்தின் ரீ ரிலீஸ் வெற்றியை தொடர்ந்து இந்த நிறுவனம், வரும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிடுகிறது. அதுமட்டுமின்றி வரும் 28ஆம் தேதி தனுஷ் தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் காரணமாக அவரது அம்பிகாபதி படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி இப்போது படத்தை வெளியிடுகின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories