Sivakasi Movie : விஜய்யின் சிவகாசி பட சீனை காப்பி அடிச்ச ஜீ தமிழ் சீரியல்; கார்த்திகை தீபம் தேர்தல் பிரச்சாரம்!

Published : Aug 01, 2025, 12:05 AM IST

சிவகாசி படத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார சீனை காப்பி அடிச்சு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பு செய்துள்ளது.

PREV
15
கார்த்திகை தீபம் 2

சினிமாவும் சீரியலும் கிட்டத்தட்ட ஒன்னு தான். நாள் கணக்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டால் அது சீரியல். சட்டுபுட்டுன்னு முடிஞ்சா அது சினிமா. சினிமாவில் குறைந்தது 2 மணி நேரம் படத்தை திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்ய கிட்டத்தட்ட 110 முதல் 130 நாட்கள் வரையில் காட்சிகள் படமாக்கப்படும். ஆனால், சீரியல்களில் அப்படியில்லை. நாள்தோறும் 20 நிமிட காட்சிகள் ஒளிபரப்பு செய்ய ஒரு வாரத்திற்கு முன் அல்லது 3 நாட்களுக்கு முன் ஒரு காட்சியை எடுத்து எடிட் செய்து வைத்துவிடுவார்கள்.

25
ரேவதி அண்ட் கார்த்திக் ராஜா

சினிமாவில் இருக்கும் சீன் தான் சீரியல்களிலும் இருக்கும். அதற்கு உதாரணம் தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகும் கார்த்திகை தீபம் 2 சீரியல். இந்த சீரியலில் தேர்தல் பிரச்சார சீன் ஒன்று தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்த சிவகாசி படத்தின் காட்சியை போன்று இருந்துள்ளது. அப்படி எந்த சீன், ஏன் அவ்வாறு வைக்கப்பட்டது என்பது பற்றி பார்க்கலாம்

35
சிவனாண்டி தேர்தல் பிரச்சாரம்

கார்த்திகை தீபம் 2 சீரியலில் சிவனாண்டி மற்றும் சாமுண்டீஸ்வரி இருவருக்கும் இடையில் பஞ்சாயத்து தலைவருக்கான போட்டி நிலவுகிறது. இதில், சாமுண்டீஸ்வரி பெண்களுக்கு நல திட்டங்கள் அறிவித்து அதன் மூலமாக தேர்தலில் ஜெயிக்க பார்க்கிறார். ஆனால், சிவனாண்டி அப்படியில்லை. ஆண்களுக்கு குடிப்பதற்கு சரக்கு வாங்கி கொடுப்பது, சாவு வீட்டிற்கு சென்று சிரிப்பது என்று மக்களிடையே அவப்பெயரை பெற்றுவிட்டார். இதையெல்லாம் முறியடிக்க பிரபல நடிகையை கூட்டி வந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய வைக்க திட்டமிட்டார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். எல்லா இன்புட்டுகளையும் கரெக்டா கொடுத்த சிவனாண்டிக்கு அவுட்புட் மட்டும் சரியாக வரவில்லை.

45
சாம்ண்டீஸ்வரி தேர்தல் பிரச்சாரம்

இதில் உள்ளே புகுந்து மயில்வாகனம் ஆட்டையை குழப்பிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் சாமுண்டிஸ்வரி ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான். என்ன படிக்க வேண்டும் என்பதை சிவனாண்டி எழுதி கொடுத்த பேப்பரை மயில்வாகனம் மாற்றி வைக்க அதனை தமிழே தெரியாத நடிகை அப்படியே படிக்க கடைசியில் அசிங்கப்பட்டதும், அவமானப்பட்டதும் எல்லாமே சிவனாண்டி தான்.

அந்த நடிகை சிவனாண்டியை தாழ்த்தியும், சாமுண்டீஸ்வரியை வாழ்த்தியும் படித்துவிட்டார். இதனால் மக்களும் தங்களது ஓட்டு சாமுண்டீஸ்வரிக்கு என்று சொல்லி கிளம்பிவிட்டனர். இப்படியொரு காட்சி தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்த சிவகாசி படத்திலும் இடம் பெற்றிருந்தது.

55
கார்த்திகை தீபம் தேர்தல் பிரச்சாரம்

அதில், விஜய்யின் தங்கை தேர்தலில் நின்றார். அதே போன்று அவரது அண்ணன் பிரகாஷ் ராஜூம் தேர்தலில் எம் எல் ஏவிற்கு நின்றார். இதில் விஜய் என்னென்னமோ செய்ய, பிரகாஷ் ராஜ் நயன் தாராவை கூட்டி வந்தார். அப்போது சுதாரித்துக் கொண்ட விஜய், நயன் தாராவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி தனது தங்கைக்காக நயன் தாரா மூலமாக வாக்கு சேகரித்தார். கிட்டத்தட்ட 2 சீனும் ஒன்னு தான். அப்படியொரு சீனைத்தான் கார்த்திகை தீபம் 2 சீரியலில் சீரியல் குழுவினர் படக்குழுவினர் பயன்படுத்தியிருக்கின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories