viruman update : ‘கைதி’யை போல் கைகொடுக்குமா ‘விருமன்’.... பிகிலை தொடர்ந்து பீஸ்ட் உடன் மோத ரெடியாகும் கார்த்தி

Ganesh A   | Asianet News
Published : Jan 14, 2022, 12:31 PM IST

விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் கையில் வேல் கம்புடன் மாஸ் லுக்கில் தோற்றமளிக்கிறார் கார்த்தி. 

PREV
15
viruman update : ‘கைதி’யை போல் கைகொடுக்குமா ‘விருமன்’.... பிகிலை தொடர்ந்து பீஸ்ட் உடன் மோத ரெடியாகும் கார்த்தி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'சுல்தான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் சூர்யா தயாரிப்பில் விருமன் படத்திலும் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. 

25

விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். பருத்திவீரன் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் தேன்மொழி என்கிற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அதிதி நடித்துள்ளார். இப்படத்தை கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய 'முத்தையா' இயக்கி உள்ளார். 

35

மேலும் பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி, சூரி, இந்திரஜா ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

45

இந்நிலையில், விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் கையில் வேல் கம்புடன் மாஸ் லுக்கில் தோற்றமளிக்கிறார் கார்த்தி. மேலும் அந்த போஸ்டரில், இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் தான் விஜய்யின் பீஸ்ட் படமும் வெளியாக உள்ளதால், அதற்கு போட்டியாக விருமன் களமிறங்க வாய்ப்புள்ளது.

55

ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. தற்போது அதே பாணியில் விஜய்யின் பீஸ்ட்டுக்கு போட்டியாக விருமன் படத்தை களமிறக்குகிறார் கார்த்தி. இந்த முறையும் வெற்றிகிட்டுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories