விருமன் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அதிதி - கார்த்தியின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, யாரும் எதிர்பார்க்காத விதமாக தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். விருமன் படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக எண்ட்ரி கொடுக்கிறார்.
28
தமிழில் இவர் நடிக்கும் முதல் படத்தை, கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய 'முத்தையா' இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.
38
தொடர்ந்து பல தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
48
பருத்திவீரன் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் தேன்மொழி என்கிற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அதிதி நடித்துள்ளார்.
58
மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி, சூரி, இந்திரஜா ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
68
செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். கார்த்தியின் பருத்திவீரன் படத்துக்கும் இவர் தான் இசை அமைத்து இருந்தார்.
78
விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
88
இந்நிலையில், விருமன் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அதிதி - கார்த்தியின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.