மாமனார் ரஜினிக்கே பாக்ஸ் ஆபிசில் டஃப் கொடுக்கும் தனுஷ்! 'கர்ணன்' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

First Published Apr 10, 2021, 10:41 AM IST

ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள 'கர்ணன்' படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி முன்னணி நடிகர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் 'கர்ணன்'. ஏப்ரல் 9ஆம் தேதி, அதாவது நேற்று மிக பிரமாண்டமாக ரிலீசாகியது. 'பட்டாஸ்' படத்தை தொடர்ந்து... சுமார் ஒன்றரை வருடத்திற்கு பின் தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படம் வெளியாவதால், நேற்றைய தினமே தமிழ் புத்தாண்டு போல திரையரங்குகளில், பட்டாசு வெடித்தும், பெரிய பெரிய கட்அவுட், பேனர், மற்றும் மேளதாளத்தோடு படத்தை வரவேற்றனர் ரசிகர்கள்.
undefined
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், இந்த படம் அமைந்துள்ளதால், மற்றொரு தேசிய விருதுக்கு தனுஷ் தயாராகி விட்டதாகவும் திரைப்பட விமர்சகர்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
undefined
கொரோனா தன்னுடைய இரண்டாவது அலையை துவங்கியுள்ளதால், கொரோனா நடவடிக்கையாக தற்போது தமிழக அரசு மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே, அனுமதி அளித்துள்ள நிலையில், முதல் நாளிலேயே 'கர்ணன்' படம் வசூலில் கெத்து காட்டியுள்ளது.
undefined
தற்போது 'கர்ணன்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியாகியுள்ள தகவலில், தமிழகம் முழுவதிலும் ரூ.10.04 கோடி வசூல் செய்துள்ளது. இதன் முலம் 10 கோடி கிளப்பில் முதல் நாளே இணைந்துள்ளது.
undefined
சூப்பர் ரஜினிகாந்த், விஜய், அஜித், ஆகியவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷும் இந்த வசூல் கிளப்பில் இணைந்து மாமனாருக்கே செம்ம டஃப் கொடுத்துள்ளார்.
undefined
அதே போல் கர்ணன் திரைப்படம் முதலில் நாள் சென்னையில் மட்டும் 92 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
undefined
தனுஷை தவிர இந்த படத்தில் நடித்துள்ள லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட அனைவரது நடிப்பிப்பும் அருமை என்றே... ஒற்றை வார்த்தையில் நச் என சொல்லும் அளவிற்கு உள்ளது.
undefined
வாள் எடுத்து... குதிரை ஏறி வந்த 'கர்ணன்' தற்போது வசூல் வேட்டையில் புகுந்து விளையாடி வருவது, படக்குழுவினர் மற்றும் ரசிகர்களை குதூகல படுத்தியுள்ளது.
undefined
click me!