விஜய் டி.வி. ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி... விரைவில் வருகிறாள் ‘வேலம்மாள்’...!

First Published Apr 9, 2021, 8:20 PM IST

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இப்படியொரு பிரம்மாண்ட சீரியலைக் கண்டதில்லை என ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு ‘வேலம்மாள்’ என்ற புதிய தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் அனைத்தும் நிகழ்ச்சிகளும் தொட்டது எல்லாம் ஹிட் ரகம் தான். விஜய் டிவியின் பாண்டியன்ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்யலட்சுமி, மெளனராகம், காற்றின் மொழி என எந்த சீரியலை எடுத்துக் கொண்டாலும் எக்கச்சக்க நட்சத்திர பட்டாளங்கள் உண்டு.
undefined
அதேபோல் குக் வித் கோமாளி, பிக்பாஸ் என ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக தேசிய அளவில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
undefined
இப்படி அடுத்தடுத்து ஹிட்டடித்து வரும் விஜய் தொலைக்காட்சி புத்தம் புதிய வரலாற்றுத் தொடர் ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இப்படியொரு பிரம்மாண்ட சீரியலைக் கண்டதில்லை என ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு ‘வேலம்மாள்’ என்ற புதிய தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.
undefined
இதில் நடிகைகள் அம்பிகா, தாமிர பரணி பானு, நடிகர் விக்னேஷ், ஓ.ஏ.கே. சுந்தர், மௌன ராகம் புகழ் கிருத்திகா (சக்தி),ரம்யா, ரேஷ்மா, ராம்ஜி, கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
undefined
ஆண் வாரிசுக்காக ஏங்கி கிடக்கும் ராஜ்ஜியத்தில் பெண் குழந்தையாக பிறக்கும் வேலம்மாளை பற்றியும், தந்தை பாசத்திற்காக ஏங்கும் அவளுடைய பாச போராட்டத்தையும் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. ரகசியமாக போர் கலைகளை கற்று, ராஜ்ஜியத்தை காக்க நினைக்கும் வேலம்மாள் இறுதியில் வென்றாரா? என்பதை சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
undefined
விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத வேலம்மாள் தொடர் ஏப்ரல் 12ம் தேதி முதல் திங்கட் கிழமை முதல் சனிக்கிழமை வரை முதல்திங்கள்முதல்சனிக்கிழமைவரைமாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
undefined
click me!