4 நாட்களிலேயே வசூலில் ட்ரிபிள் செஞ்சுரி அடித்த காந்தாரா சாப்டர் 1 - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Published : Oct 06, 2025, 09:47 AM IST

ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பற்றி பார்க்கலாம்.

PREV
14
Kantara Chapter 1 Box Office

கன்னட நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் உலகம் முழுவதும் 3 நாட்களில் 235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஹோம்பாளே ஃபிலிம்ஸின் 'காந்தாரா-1' திரைப்படம் உலகம் முழுவதும் 7 மொழிகளில் 7000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி, எல்லா இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'டிவைன் ஸ்டார்' என்று புகழ்பெற்ற ரிஷப் ஷெட்டியின் காந்தாரா-1 படத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

24
உலகம் முழுவதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்!

உலகம் முழுவதும் காந்தாரா திரைப்படத்தின் அலை வீசி வருவதால், எதிர்காலத்தில் இந்த படத்தின் வசூல் 1000 கோடியை தாண்டி சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காந்தாரா திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ஜெயராமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த அக்டோபர் 2-ந் தேதி தசரா பண்டிகையன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வெளியான முதல் நாளில் இருந்தே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் வசூலிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது.

34
‘காந்தாரா சாப்டர் 1’ பாக்ஸ் ஆபிஸ்

அந்த வகையில் இப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.235 கோடி வசூலித்திருந்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது நான்காம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 4-வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.61.5 கோடி வசூலித்து உள்ளது. அதில் அதிகபட்சமாக அப்படத்தின் இந்தி வெர்ஷன் ரூ.23.5 கோடியும், கன்னட வெர்ஷன் ரூ.15.5 கோடியும், தெலுங்கு பதிப்பு ரூ.11.25 கோடியும், தமிழ் வெர்ஷன் ரூ.6.5 கோடியும், மலையாள வெர்ஷன் ரூ.4.75 கோடியும் வசூலித்துள்ளது. இதுதவிர வெளிநாடுகளிலும் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுவதால், இப்படம் நான்கு நாட்களில் 300 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

44
30 நாடுகளில் ரிலீஸ் ஆன ‘காந்தாரா சாப்டர் 1’

உலகம் முழுவதும் 30 நாடுகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது காந்தாரா சாப்டர் 1. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் அஜித்தின் குட் பேட் அக்லி, பவன் கல்யாணின் ஓஜி, அமீர்கானின் சிதாரே ஜமீன் பர் போன்ற திரைப்படங்களை முந்தி சாதனை படைத்துள்ளது காந்தாரா சாப்டர் 1. இப்படத்தின் வசூல் வேட்டை மேலும் தொடரும் என்பதால் இப்படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணையவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆயிரம் கோடி வசூல் செய்த கன்னட படம் என்கிற சாதனையை கேஜிஎஃப் 2 படைத்த நிலையில், அதனுடன் காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories