வெற்றி மேல் வெற்றி - 'காந்தாரா', 'கேஜிஎஃப்' பாடகி அனன்யா பட் திருமணம்!

Published : Nov 10, 2025, 10:34 PM IST

கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பின்னணிப் பாடகியாக அறியப்பட்டு, 'சோஜுகாத சூஜுமல்லிகே' பாடல் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த பிரபல கன்னடப் பாடகி அனன்யா பட், டிரம்மர் மஞ்சுவை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

PREV
16
பாடகி அனன்யா பட்

பிரபல பின்னணிப் பாடகி அனன்யா பட். இவர் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரையுலகிலும் தனது வெண்கல குரலால் பிரபலமானவர். தற்போது யாருக்கும் தெரியாமல் திருமண வாழ்வில் நுழைந்துள்ளார்.

26
திருப்பதியில் திருமணம்
அனன்யா பட், தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நவம்பர் 9 அன்று திருப்பதியில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடியின் புகைப்படம் வைரலானதும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
36
டிரம்மர் மஞ்சுவுடன் திருமணம்
சர்வதேச இசைக்கலைஞரும், டிரம்மர் கலைஞருமான மஞ்சுவை அனன்யா பட் திருமணம் செய்துள்ளார். பிரபல ஜோதிடரான பண்டிட் டாக்டர் அருண் குருஜி தலைமையில் இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தது.
46
காதல் திருமணம்
இந்த ஜோடி நீண்ட நாட்களாக ஒன்றாகக் காணப்பட்டனர், பல நிகழ்ச்சிகளிலும் இணைந்து பங்கேற்றுள்ளனர். எனவே இது காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. நெருங்கியவர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்துகொண்டனர்.
56
கேஜிஎஃப், காந்தாராவிற்கு குரல் கொடுத்த அனன்யா பட்
அனன்யா பட் கேஜிஎஃப், காந்தாரா படங்களின் பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளார். கேஜிஎஃப் 1 மற்றும் 2-ல் இடம்பெற்ற பல பாடல்கள் இவரது குரலில் அற்புதமாக ஒலித்தன.
66
பிரபலமான பாடல்கள்
அனன்யாவின் ‘சோஜுகாத சூஜி மல்லிகே’ பாடல் யூடியூப் மூலம் அனைவரின் மனதையும் வென்றது. மேலும், 'டகரு' படத்தின் 'மெ மென்டல் ஹோஜாவா', 'புஷ்பா' படத்தின் 'சாமி சாமி' பாடல்களும் இவரது குரலில் வெளியானது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories