கோடியில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதியை... விடாமல் துரத்தும் பிரச்சனை! அவரே கூறிய தகவல்!

Published : Nov 10, 2025, 06:51 PM IST

Vijay Sethupathi Reveals the Struggle: நடிகர் விஜய் சேதுபதி தன்னை விடாமல் துரத்தும் பிரச்னையை பார்த்து பயந்து விடாமல், அதனுடன் வாழ கற்றுக்கொண்டதாக எதார்த்தமான விஷயத்தை கூறியுள்ளார்.

PREV
14
விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோ என்கிற இமேஜை மட்டுமே விரும்பாத விஜய் சேதுபதி, சவாலான குணசித்ர வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் ரூ.100 கோடியை எட்டியது.

24
அஜித் - ரஜினிக்கு வில்லனா?

இதன் காரணமாக இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் ரஜிகாந்த்தின் 173-ஆவது படத்திலும், அஜித்தின் அடுத்த படத்திலும் இவரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒரு பக்கம் விஜய் சேதுபதி நடிப்பில் பிசியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் படு பிசியாக உள்ளார்.

34
கமலை மிஞ்சிய விஜய் சேதுபதி:

குறிப்பாக கமல்ஹாசன் போல் சுற்றி வளைத்து, யாருக்கும் புரியாதது போல் பொடி வைத்து திட்டாமல்.... போட்டியாளர்களை வாரம் இரு நாட்கள் வெச்சு செய்து வருகிறார். எனவே பிக்பாஸ் ரசிகர்களும், வாரம் 5 நாட்கள் நிகழ்ச்சியை மிஸ் செய்தாலும் வார இறுதியில் விஜய் சேதுபதி வரும் அந்த இரண்டு நாட்களை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

44
விஜய் சேதுபதியை துரத்தும் பிரச்சனை:

இந்நிலையில், விஜய் சேதுபதி எதார்த்தமாக பேசியுள்ள ஒரு தகவல் அனைவருக்கும் பொருத்தும் விதத்தில் அமைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில், "பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என இருப்பதாக வரும் குற்றச்சாட்டு பற்றி தான் விஜய் சேதுபதி பேசினார்.... நான் ஆயிரங்களில் சம்பளம் பெரும் போது என்னுடைய கடனும் ஆயிரங்களில் இருந்தது. லட்சங்களில் சம்பாதிக்க துவங்கியதும் அதற்கு தகுந்த போல் கடன் இருந்தது. தற்போது கோடியில் சம்பாதிக்கிறேன்... ஆனாலும் அந்த பிரச்சனை மட்டும் என்னை துரத்தி கொண்டு தான் உள்ளது. அதனால் அதனுடனே வாழ கற்றுக்கொண்டேன் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்". இது அவருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பொருந்த கூடிய ஒரு தகவல் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories