இப்படி டோலிவுட்டில் போதை பொருள் விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில், கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல தயாரிப்பாளரான சந்திரசேகர், தனது மனைவி நமீதா போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி போதைப் பொருள் வியாபாரியான லக்ஷ்மிஷ் பிரபு உடன் தனது மனைவி தகாத உறவு வைத்திருந்ததாகவும், ஒருமுறை இருவரும் ஒரே வீட்டில் இருந்தபோது தானே கையும் களவுமாக பிடித்ததாக சந்திரசேகர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.