பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே... பிக்பாஸ் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் விதமாக, அக்டோபர் 3 ஆம் தேதியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் புரோமோ மூலம் தோன்றி உறுதி செய்தார் நடிகர் கமல்ஹாசன்.
நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் கன்ஃபாம் ஆனது முதல், இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் தீயாக பரவி வந்தது.
அந்த வகையில் பலரது பேர் இதில் அடிபட்டாலும், இன்று 6 மணிக்கு மேல் இதில் யார் யார் உறுதியாக கலந்து கொள்கிறார்கள் என்பது குறித்து நமக்கு தெரியவந்துவிடும்.
புகைப்படம் நன்றி : black sheep
இது ஒருபுறம் இருக்க தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கி விளையாட உள்ள வீட்டின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக பரவி வருகிறது.
புகைப்படம் நன்றி : black sheep
கடந்த நான்கு சீசன்களை விட பிரமாண்டமாகவும், மிகவும் கலர் ஃபுல்லாகவும் பிக்பாஸ் சீசன் 5 வீடு உள்ளது.
புகைப்படம் நன்றி : black sheep
சிங்கிள் பெட்டுக்காக வரும் போட்டியை தடுப்பதற்காகவே இந்த முறை பிக்பாஸ் வீட்டில், எல்லாமே டபுள் பெட்டாக மாற்றியுள்ளதை பார்க்கலாம்.
லிவிங் ரூமில், கமல் அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்தித்து பேசும் போது, ஏதுவாக அனைவரும் அமர்ந்து பேசும் வகையில் போடப்பட்டுள்ள சோபா
டைன்னிங் டேபிள்... கடந்த நான்கு சீசனை விட இந்த சீசனில் கொஞ்சம் இடம் அதிக படுத்தியுள்ளது போல் தெரிகிறது, இவை அனைத்தையும் இன்று மாலை கமல் விவரமாக கூறுவார்.
இன்றைய தினம் 16 போட்டியாளர்களை வரவேற்க பச்சை பசேர் என காத்திருக்கும் பிக்பாஸ் வீட்டின் முகப்பு... வேற லெவல் தான்
வாவ்... பார்ப்பவர்கள் அனைவரையும் பிரமிக்க வைக்கும் பசுமையான சிலை, இதை சுற்றி பார்த்து ரசிப்பதற்கே மிக அருமையாக உள்ளது...