விக்ரம் பட ரோலெக்ஸ் ரேஞ்சுக்கு... தளபதி 67-லும் இடம்பெறும் மாஸான கேரக்டர் - அதில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

First Published | Nov 18, 2022, 10:25 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள தளபதி 67 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். நடிகர் விஜய் நாயகனாக நடிக்க உள்ள இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணிகளை தற்போது மேற்கொண்டு வரும் அவர், இப்படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இதற்காக பல்வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்களை நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தளபதி 67 படம் ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் இதில் நடிகர் விஜய் மும்பையை சேர்ந்த தாதாவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத், விஷால் ஆகியோரை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். அதேபோல் இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... முதல் விமர்சனமே முதல்வரின் விமர்சனம்..! கலகத் தலைவன் படம் பார்த்து மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

Tap to resize

இந்நிலையில், சமீபத்திய தகவல் படி தளபதி 67 படத்தில் ஒரு மாஸான கேமியோ ரோல் இருப்பதாகவும், அது விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் போல் செம்ம கெத்தான ஒரு வேடமாக இருக்கும் என்றும், மேலும் அந்த ரோலில் நடிகர் கமல்ஹாசனை நடிக்க வைக்கவும் லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் செயல்பட உள்ளதாம். ஏனெனில் விக்ரம் படத்தின் தொடர்ச்சி போல் இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகவும், காப்பிரைட் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக கமலையும் இணை தயாரிப்பாளராக சேர்த்து உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதை வைத்து பார்த்தால், தளபதி 67 திரைப்பரம் LCU-வின் ஒரு அங்கமாக இருப்பதுபோல் தெரிகிறது.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் சர்ச்சை ராணி நயன்தாரா... காதல், கல்யாணம் முதல் குழந்தை பெற்றது வரை அவர் எதிர்கொண்ட சர்ச்சைகள்..!

Latest Videos

click me!