Biggboss Tamil: தவறாக போன நெட்டிசன்கள் கணிப்பு! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?

Published : Nov 12, 2022, 08:30 PM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
17
Biggboss Tamil: தவறாக போன நெட்டிசன்கள் கணிப்பு! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?

கடந்த மாதம் துவங்கப்பட்ட 'பிக்பாஸ்' சீசன் 6 நிகழ்ச்சியில், யாரும் எதிர்பாராத விதமாக மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 11 பெண் போட்டியாளர்களும், 9 ஆண் போட்டியாளர்களும், மற்றும் ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டனர்.
 

27

தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் மக்களின் வாக்குகள் அடிப்படையில், வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு வருகிறார். அந்த வகையில் முதல் வாரத்தில் தன்னுடைய குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்கிற காரணத்தால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அடம் பிடித்து வெளியே சென்றார் ஜி.பி.முத்து.

Samantha: கண்கலங்க வைக்கும் சமந்தாவின் நிலை? ஒரு கையில் ஊசி... மற்றொரு கையால் உடல் பயிற்சி ஷாக்கிங் வீடியோ..!

37

இவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாவது வாரம் அசல் கோளாறும், கடந்த வாரம் செரீனாகும் எலிமினேட் செய்யப்பட்டனர்.

47

இவர்களை தொடர்ந்து, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில் சற்று முன் இதற்கான பதிலும் கிடைத்துள்ளது.
 

Biggboss Tamil 6: பர்சனல் அட்டாக் செய்யும் அமுதவாணன்... அறை வாங்குவார் தனலட்சுமி..! வெளியான பரபரப்பு புரோமோ..!

57

இந்த வார நாமினேஷன் பட்டியலில், அசீம், விக்ரமன், மகேஸ்வரி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, ஏ.டி.கே ஆகியோரின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதில் குறைவான வாக்குகளுடன் ராம் வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கணித்து கூறினர்.

67

பல சமயங்களில் நெட்டிசன்கள் கணித்தது போல் நடந்தாலும், சில சமயங்களில் அவர்களுடைய கணிப்பு தவறாகி போய்விடுகிறது. அந்த வகையில் இந்த வாரம் நூல் இழையில் ராம் ராமசாமி எலிமினேஷனில் இருந்து தப்பிக்க, மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

Yashoda Box Office: வசூல் வேட்டையில் மிரட்டும் சமந்தாவின் 'யசோதா'...! முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

77

இதுகுறித்து நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இத்தனை வாரங்கள் சைலன்டாக பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய விளையாட்டை விளையாடி வரும் ராம், இனிவரும் வாரங்களிலாவது வாயை திறப்பாரா?  தன்னை பிக்பாஸ் வீட்டில் தக்க வைத்துக் கொள்வாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories