தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷுக்கு, டப் கொடுக்கும் விதமாக, திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள அடுத்த வாரிசு நடிகை, கல்யாணி ப்ரியதர்ஷன். லிசி, மற்றும் ப்ரியதர்ஷனின் மகளான இவர், ஏற்கனவே ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இப்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.