தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கிளுகிளுப்பேற்றினார்.
மேலும்... குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
கொரோனா இரண்டாவது அலை தணிந்துள்ளதால்... மீண்டும் அடுத்தடுத்த படங்கள் நடிப்பதில் பிசியாகி வருகிறார்.
இந்நிலையில் இவர் அழகு தேவதையாக மின்னும், சிவப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
உண்மையில் காஜலுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு அமைந்துள்ளது இந்த புகைப்படங்கள்.
அழகில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் காஜல் அகர்வாலின் வேற லெவல் போட்டோஸ் இவை...