மாதம்பட்டி ரங்கராஜுக்கு அடுத்த ஆப்பு ரெடி; சிபிசிஐடிக்கு வழக்கை மாற்ற செல்லும் ஜாய் கிரிசில்டா!

Published : Nov 06, 2025, 05:27 PM IST

Joy Crizildaa Set to Shift Case to CBI: மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்ததாக கூறிய நிலையில், உண்மை வெளியே வர சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றுமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

PREV
14
ஸ்டார் சமையல் கலைஞர் ரங்கராஜ்:

பல பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு ஸ்டார் சமையல் கலைஞராக கலக்கி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி, 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் தனக்கு ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றிய ஜாய் கிரிசில்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலதாக மாறியது.

24
மாதம்பட்டி மூலம் கர்ப்பமான ஜாய்:

இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ துவங்கிய நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு கட்டத்தில் ஜாய் கிரிசில்டாவுக்கு தாலி கட்டி மனைவி என்கிற அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார். இந்த திருமணம் செல்லாது என்றாலும், ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மூலம் கர்ப்பமான நிலையில்... கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தான் இவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

34
மிரட்டி திருமணமா?

தன்னுடைய குழந்தை அப்படியே மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருப்பதாகவும், குழந்தைக்கு ராஹாராஜ் என பெயரிட்டுள்ளதாகவும் குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிட்டு தெரிவித்தார் ஜாய். மேலும் , குழந்தை பிறப்பதற்கு முன்பு ஜாய் மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து மகளிர் ஆணையம் ரங்கராஜிடம் விசாரணை நடத்தியபோது, தன்னை மிரட்டி தான் ஜாய் திருமணம் செய்து கொண்டதாகவும்,  குழந்தை தன்னுடையது என  DNA பரிசோதனையில் தெரியவந்தால் குழந்தைக்கு தேவையான அனைத்தையும் வாழ்நாள் முழுக்க செய்ய தயார் என கூறி இருந்தார். இதுகுறித்து மாதம்பட்டி தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

44
மாதம்பட்டி ரங்கராஜுக்கு அடுத்த ஆப்பு:

தற்போது ஜாய் தன்னுடைய அடுத்த ஆட்டத்தை துவங்கி, மாதம்பட்டிக்கு ஆப்பு வைத்துள்ளார். அதாவது  தனது புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதியவில்லை என கூறி, மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories