மாதம்பட்டியின் பணத்துக்காகவும், தங்களின் குடும்ப வாழ்க்கையை கெடுப்பதற்காகவும் தான், ஜாய் இப்படி கிரிசில்டா இப்படியெல்லாம் செய்கிறார் என ஸ்ருதி கூறிய நிலையில், அதற்க்கு ஸ்கீரின் ஷாட் போட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
ஜாய் கிரிசில்டா மாற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை
ஜாய் கிரிசில்டா மாற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மகளிர் ஆணையத்தில் ஜாய், ரங்கராஜ் மீது கொடுத்த வழக்கில் விசாரணை செய்த போது... ரங்கராஜ் தன்னுடைய குழந்தையை ஏற்றுக்கொண்டதாகவும், தன்னை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டதாகவும் கூறி இருந்தார்.
24
DNA பரிசோதனை
ஆனால் இதை ஆமோதிக்கும் விதமாக, மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில், தன்னை ஜாய் கிரிசில்டா மிரட்டி தான் திருமணம் செய்து கொண்டதாகவும், DNA பரிசோதனையில் குழந்தை தன்னுடையது என உறுதியானால் அதன் வாழ்நாள் முக்கிய ஆகும் செலவை ஏற்று கொள்வதக தெரிவித்திருந்தார்.
34
ஜாய் கிரிசில்டா
இதை பார்த்து கடுப்பான ஜாய் கிரிசில்டா, ரங்கராஜ் தனக்கு உருகி உருகி அனுப்பிய மெசேஜின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, அதில்"இவரு வருவாராம் கல்யாணம் பண்ணுவாராம் குழந்தை குடுப்பாராம் அப்புறம் ஓடி போவாராம் பெண்கள் வாழ்க்கையை அழிப்பாராம் இதுல இவங்க protect பண்ணுவாகலாம் என்ன கருமம் டா இது என கேலி செய்யும் விதமாக எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் உருகி உருகி லவ் பண்ணிட்டு blackmail னு சொன்னா எப்புடி so called husband " என கேள்வியும் எழுப்பியுள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
44
ஜாய் கிரிசில்டா ரங்கராஜ்
இவர்கள் இருவரின் விவாதம் ஒருபக்கம் சென்று கொண்டிருக்க... இதுநாள் வரை வாய் திறக்காமல் இருந்து வந்த ஸ்ருதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் ஜாய் கிரிசில்டா தன்னுடைய கணவரிடம் இருக்கும் பணம் மீது கண் வைத்து தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.