90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல்களான மர்மதேசம், ஜீ பூம் பாவில் நடித்த பிரபலம் தற்கொலை - சோகத்தில் திரையுலகினர்

Published : Oct 05, 2022, 09:50 AM IST

மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்திய லோகேஷ் ராஜேந்திரன், திடீரென தற்கொலை செய்துகொண்டது அவரது நண்பர்களையும், உறவினர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. 

PREV
13
90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல்களான மர்மதேசம், ஜீ பூம் பாவில் நடித்த பிரபலம் தற்கொலை - சோகத்தில் திரையுலகினர்

90ஸ் கிட்ஸால் மறக்க முடியாத சீரியல்கள் என்றால் அது ஜீ பூம் பா மற்றும் மர்மதேசம் ஆகிய தொடர்கள் தான். இன்றளவும் இந்த தொடர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் பலரும் இன்று சினிமாவில் கலக்கி வருகின்றனர்.

23

மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்தியவர் லோகேஷ். இவர் ஜீ பூம் பா தொடர் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இவருக்கு நடிப்பை விட டைரக்‌ஷனில் ஆர்வம் இருந்ததால் அது சம்பந்தமான வேலைகளை செய்து வந்தார். சில குறும்படங்களையும் இயக்கி வெளியிட்டுள்ளார். அதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது. 

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் பிகில் கிளப்பும் பொன்னியின் செல்வன்

33

லோகேஷ், விரைவில் சினிமாவில் இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருந்த லோகேஷின் இந்த திடீர் தற்கொலை முடிவு அவரது நண்பர்களையும், உறவினர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அந்த ஒரு நிமிட உரையாடல்... நன்றி தலைவா - ரஜினியின் சர்ப்ரைஸ் வாழ்த்தால் சிலாகித்துப்போன ஜெயம் ரவி

click me!

Recommended Stories