ஜவான் படத்தின் முதல் சிங்கிள் பாடல், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது . ஹிந்தியில் 'ஜிந்தா பந்தா', தமிழில் 'வந்த எடம்' மற்றும் தெலுங்கில் 'தும்மே துலிபேலா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த பாடல் தற்போது ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் தீயாக பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.