Sigma Movie Box Office Collection : ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்த சிக்மா திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலித்தது என்பதை பார்க்கலாம்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் 'சிக்மா'. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா ஜோடியாக நடித்துள்ளனர். சம்பத் ராஜ், ராஜு சுந்தரம் மாஸ்டர் முக்கிய ரோலில் வர, லைகா சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். விஜய் மகன் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.
குரு (சந்தீப் கிஷன்) தன் அம்மா நினைவாக ஒரு லைப்ரரியை நடத்தி வர்றார். அவருக்கு கழுத்து வரைக்கும் கடன் இருக்கு. எப்படியாவது பணம் சம்பாதிக்கணும்னு அவர் நினைக்கிறார். இன்னொரு பக்கம் வீரய்யா ரெட்டியும் (சம்பத் ராஜ்), வின்சென்ட்டும் சேர்ந்து மாஃபியா, கேசினோ பிசினஸ் பண்றாங்க. இதுக்கு பின்னாடி பெரிய போதைப்பொருள் வியாபாரம் நடக்குது. ஒரு கன்டெய்னர்ல 1000 கோடி ரூபாய் இருக்கு.
அதோட சாவியும், பென் டிரைவும் வின்சென்ட் கிட்ட இருக்கு. இந்த நேரத்துல ரெட்டியும் வின்சென்ட்டும் பிரியுறாங்க. ரெட்டி மேல போலீஸ் அட்டாக் நடக்குது, ஆனா அவர் தப்பிச்சிடுறார். அந்த சாவிக்கான தேடல் நடக்குது. இந்த 1000 கோடி மேட்டர் குரு டீமுக்கு (ஃபரியா, ராஜு சுந்தரம்) தெரிய வருது. அவங்க அந்தப் பணத்தை அடிக்க பிளான் பண்றாங்க. அப்புறம் என்ன ஆச்சுங்கிறதுதான் கதை.
34
கலவையான விமர்சனங்களை பெறும் சிக்மா
இயக்குநர் ஜேசன் சஞ்சய் 1000 கோடி பணத்தை சுத்தி நடக்குற கதையை எடுத்திருக்கார். ஒரு பக்கம் க்ரைம், இன்னொரு பக்கம் ஹீரோவோட கடன் பிரச்சினைனு ரெண்டையும் அவர் பேரலலா கொண்டு போயிருக்கார். கதை ரொம்ப சிம்பிள். ஆனா திரைக்கதையை ஜேசன் ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிட்டார். ஆரம்பத்துல படம் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருந்தாலும், போகப் போக என்ன நடக்குதுன்னே புரியல. சம்பந்தமே இல்லாம நிறைய கேரக்டர்கள் வருது.
இந்நிலையில் சிக்மா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.2.7 கோடி வசூலித்துள்ளது. இதுதவிர வெளிநாட்டு வசூலை சேர்த்தால், இதன் முதல் நாள் வசூல் ரூ.3 கோடியை தாண்டிவிடும். அக்டோபர் 1ந் தேதி ரிலீஸ் ஆன பத்தா படத்தை விட சிக்மாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பத்தா படம் முதல் நாளில் ரூ.2 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. ஆனால் சிக்மா படம் ரூ.3 கோடிக்கு மேல் வசூலித்து, இந்த வார பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.